அந்தம்மா யாரு?... கல்லூரி விழாவில் தமிழிசையை விமர்சித்த அமைச்சர் பொன்முடி
குமரி ஆனந்தன் இல்லையென்றால் யார் என்று பெயர் கூட தெரிந்திருக்காத நபர் அந்தம்மா, தமிழிசை சௌந்தரராஜன்.
இளமையிலேயே இயக்கத்திற்காக உழைத்தவர் பெரியார், அண்ணா. கொள்கையில் வளர்ந்தவர் உதயநிதி ஸ்டாலின். அவர் இளைஞர்களின் வழிகாட்டியாக கட்டாயம் இருப்பார். துணை முதல்வருக்கு தகுதியானவர் என்று போடியில் செய்தியாளர் சந்திப்பில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.
சுங்க கட்டணம் வசூல் ; இதுவரை கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? கேள்வி கேட்ட செல்வ பெருந்தகை
போடிநாயக்கனூரில் உள்ள ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியின் 50வது ஆண்டு பொன்விழா நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ள தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பொன்விழா ஆண்டு நுழைவாயில் மற்றும் சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய பொன்முடி, கலைஞரால் துவங்கப்பட்ட இந்த கல்லூரி கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா அன்று 50 ஆம் ஆண்டு பொன்விழா காண்பது மகிழ்ச்சி என்றார்.
"50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளேன்" - முதலமைச்சர் ஸ்டாலின்
இந்த ஆட்சியானது சுகாதாரம் மற்றும் கல்விக்காக மட்டுமே அதன் வழியில் அன்றைய காலகட்டத்தில் படித்த மாணவ மாணவிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டினார். நிகழ்வில் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, தங்கதமிழ்செல்வன் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள், கல்லூரி நிர்வாகத்தினர், மாணவ - மாணவிகள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். அவரைத் தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் செய்தியாளர் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நேற்று கலந்தது குறித்து கேள்வி எழுப்பினர், அதற்கு அவர் மாணவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப அவர்களுக்கு பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன் என்றார்.
Harsha Sai: இவரா? பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை புகார் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
கடந்த மூன்று ஆண்டுகளாக பட்டம் வழங்கப்படாத மாணவர்களுக்காக தமிழக அரசு பரிந்துரைக்கப்பட்டு அதற்கான பட்டம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு மாணவர்களின் எண்ணத்துக்கு ஏற்ப இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினேன் என்றார். குமரி ஆனந்தன் இல்லையென்றால் யார் என்று பெயர் கூட தெரிந்திருக்காத நபர் அந்தம்மா, தமிழிசை சௌந்தரராஜன். அவர்கள் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள் என தமிழிசை சொளந்தரராஜனை விமர்சித்தார்.
ஆய்வின் போது செல்போன் பேசியபடியே வந்த பெண் பொறியாளர்: கடுப்பாகி பறித்த தஞ்சாவூர் மேயர்
பின்னர், ஆனால் இளமையிலேயே இயக்கத்திற்காக உழைத்தவர் பெரியார், அண்ணா. கொள்கையில் வளர்ந்தவர் உதயநிதி ஸ்டாலின். அவர் இளைஞர்களின் வழிகாட்டியாக கட்டாயம் இருப்பார் என்றார். உயர்கல்வி சுகாதாரத்தை இரு கண்களாக பார்ப்பவர் முதல்வர் ஸ்டாலின். எண்ணிக்கை மட்டும் உயர்ந்தால் போதாது தரமும் உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று பேசினார்.