மேலும் அறிய
Advertisement
சிறப்பு சேர் வேண்டாம், பிளாஸ்டிக் சேர் போதும்; அமைச்சர் செயலால் நெகிழ்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம்
அமைச்சர் மூர்த்தி எனக்கு மட்டும் சிறப்பு அலங்கார சேர் என்பது வேண்டாம் என தெரிவித்து பிளாஸ்டிக் சேரில் அமர்ந்தது பள்ளி நிர்வாகிகளிடமும், பெற்றோரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விளையாட்டு துறைக்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும் மிக முக்கியத்துவத்தை தந்து கொண்டிருக்கிறார், அதனால் தான் கிராம பகுதி மாணவர்களும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வாங்கும் அளவிற்கு முன்னேறி உள்ளனர்: விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உலகளவில் ஹாக்கி மற்றும் செஸ் போட்டிகளை நடத்தி தமிழ்நாட்டிற்கு பெருமையினை சேர்த்துள்ளார் என அமைச்சர் மூர்த்தி பேச்சு.
#madurai | மதுரை ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் விளையாட்டு விழா போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் @pmoorthy21 அவர்களுக்கு அலங்கரிக்கப்பட்ட சிறப்பு சேர் ஒதுக்கப்பட்டது. அதனை பார்த்த அவர் எனக்கும் பிளாஸ்டிக் சேர் போதும் என மாற்றச் சொன்னார். | pic.twitter.com/PBNApfTmNl
— arunchinna (@arunreporter92) August 29, 2023
மதுரை ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் விளையாட்டு விழா போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்வில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி .மூர்த்தி கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மூர்த்தி, இது போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதனால் மாணவர்களுக்கு திறமையினை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை இது ஏற்படுத்தித் தருகிறது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விளையாட்டு துறைக்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும் மிக முக்கிய துவத்தை தந்து கொண்டிருக்கிறார், அதனால் தான் கிராம பகுதி மாணவர்களும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வாங்கும் அளவிற்கு முன்னேறி உள்ளனர் எனவும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உலகளவில் ஹாக்கி மற்றும் செஸ் போட்டிகளை நடத்தி தமிழ்நாட்டிற்கு பெருமையினை சேர்த்துள்ளார், மக்களை சந்தித்து பணி செய்தால் தான் மக்கள் எங்களை மதிப்பார்கள் இல்லையென்றால் அவர்களது ஜனநாயக கடமையை தேர்தலில் சரியாக செய்வார்கள் எனவும், எங்களுடைய முதலமைச்சரின் நோக்கமே எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் அனைவரும் சமம் என்பதே.
அதனால்தான் விழாவில் உயர்ந்த தனியாக அலங்கரிக்கப்பட்ட இருக்கையை எனக்கு வேண்டாம் என எடுக்க சொன்னதாகவும், பத்திர பதிவுத் துறையில் உயர்ந்த மேடையில் பதிவாளர் அமர்ந்ததையே மாற்றியது சமூக நீதி திமுக அரசு என்றும் அனைவரும் சமம் என்பதையும், ஒருவரது பணி சேவையை பொறுத்து உயர்ந்த இடத்திற்கு வர முடியுமே தவிர, பதவியை வைத்து இருக்கக் கூடாது எனவும் கூறினார்.
அமைச்சர் மூர்த்தி எனக்கு மட்டும் சிறப்பு அலங்கார சேர் என்பது வேண்டாம் என தெரிவித்து பிளாஸ்டிக் சேரில் அமர்ந்தது பள்ளி நிர்வாகிகளிடமும், பெற்றோரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. .
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Karuppaswamy Kumbabishekam : வெகு விமரிசையாக நடைபெற்றது, பிரசித்திபெற்ற முரண்ட கருப்பசாமி கோயிலின் கும்பாபிஷேக விழா
மேலும் செய்திகள் படிக்க - Soori Birthday: இன்று அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள்: ஸ்பெஷல் பரிசு கொடுத்த சூரி ரசிகர்கள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion