மேலும் அறிய

தற்கொலையை தடுக்க பள்ளி விடுதிகளை ஆய்வு செய்ய உத்தரவு - அமைச்சர் கீதா ஜீவன்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு  அழுத்தம் கொடுக்க வேண்டாம். அவர்களுக்கு பிடிச்ச பாடம் இதுதான் படிக்கனுன்ற மாதிரி வற்புறுத்தவும் கூடாது - மதுரையில் அமைச்சர் கீதாஜீவன் பேட்டி.

உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் கண்காட்சியை சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். பின்பு கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். 

அதன் பின் செய்தியாளர்களிடம்., “பெண்கள் மட்டும் குழந்தைகளுடைய நலன் மற்றும் பாதுகாப்பின் மீது அதிக கவனச் செலுத்தணும் அந்த நலன் மட்டும் பாதுகாப்புக்கான சட்டத்தை முறைப்படுத்துவதில் அதிக சுரத்து எடுத்து எல்லா வழக்குகளும் வேகப்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த அரசின் நிலைப்பாடு. அதுபோல இப்ப வழக்குகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது. குற்ற செயல் நடைபெற்ற உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குழந்தை கடத்தல்  மூலம் பிச்சை எடுப்பதற்கும் பிற  உடல் உறுப்பு மாற்றத்துக்கும் , அவர்களுடைய  உழைப்பு சுரண்டலுக்கு , பாலின சுரண்டலுக்காக பிள்ளைகள் கடத்தப்படுறது.

தற்கொலையை தடுக்க பள்ளி விடுதிகளை ஆய்வு செய்ய உத்தரவு - அமைச்சர் கீதா ஜீவன்
 
இதுபோல் நடைபெறாமல் இருக்க உடனடியாக அவர்களை காவல்துறை மீட்டெடுத்து உரியவர்களிடம்  ஒப்படைகிறார்கள். மற்ற மாநிலங்களில் உள்ள சிறுவர்களை அங்குள்ள உயர் அதிகாரிகள் ஆட்சித் தலைவரிடம் பேசி அந்த பிள்ளைகளை அவங்க தாய் தகப்பனிடம் ஒப்படைக்கும் பணியும்  வேகப்படுத்தப்பட்டுள்ளது. தாய்ப்பால் உடைய முக்கியத்துவம்,  ஆரோக்கியத்தோட பிள்ளை இருக்கணும்னா தாய்ப்பால் கொடுப்பது அவசியம். பெண்களுக்கும் தாய்மார்களுக்கும் இளம் தாய்மார்களுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும், இந்த துறையை அறிவிப்பது என்னன்னா ஆயிரம் நாட்கள் மிக முக்கியமான நாட்கள். கரு உருவானது முதல் இரண்டு வயது வரை நிச்சயமாக அதிக அளவு ஊட்டச்சத்து கொடுக்கணும். ஆறு மாசம் தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும். அறிவாற்றல் மிக்க ஒரு சமுதாய உருவாகும் என்ற விழிப்புணர்வை ஒட்டிக்கொண்டு வருகிறோம்.

தற்கொலையை தடுக்க பள்ளி விடுதிகளை ஆய்வு செய்ய உத்தரவு - அமைச்சர் கீதா ஜீவன்
அவர்கள் இந்த ஒரு வாரம் முழுவதுமே வீடு வீடாக சந்திக்கிறார்கள். அந்த போஸ்டர் ஒட்டப்படுகிறது இப்படி ஒரு விழிப்புணர்வு ஒரு வாரம் தமிழகம் எங்கும் நடைபெறுகிறது. இளஞ்சிரார்கள்  சட்டத்துக்கு முரணான செயலை ஈடுபடுவது சமீபமாக அதிகரித்துள்ளது. கல்வி நிலையத்துக்கு போகாமல் இருக்க  பல காரணங்கள் இருக்கலாம். இல்ல வறுமையின் காரணமாக கல்வி நிலையத்துக்கு போகாமல் டிராஃபோர்ஸ் ஆகுற பிள்ளைகள் எல்லாமே கண்டறிந்து கல்வி நிலையத்துக்கு அவர்களை படிக்க வைக்க வேண்டும். இல்லையென்றால் தொழில் பயிற்சி கொடுக்கணும். தவறான செயல், அதாவது கஞ்சா விற்பனையில் ஈடுபடுவது,  சரக்கு கள்ளத்தனமாக வைப்பது போன்ற  நிறைய செயல்கள் சிறுவர்களை பங்கேற்க செய்வது இப்போ ஒரு பெரிய ஒரு நிகழ்வாக நடந்து வருகிறது .
 
தற்கொலையை தடுக்க பள்ளி விடுதிகளை ஆய்வு செய்ய உத்தரவு - அமைச்சர் கீதா ஜீவன்
அதை  குறைக்க பெற்றோர்களுக்கு  கவுன்சிலிங் கொடுக்கிறோம்.  நம்ம வந்து பெற்றோர்களுக்கும் ஒரு அவேர்னஸ் கொடுக்கணும் அழுத்தத்தை பிள்ளைங்க மேல திணிக்க கூடாது . அவர்கள் இஷ்டப்பட்ட பாடத்தை படிக்கப் போறான். நிறைய பிள்ளைங்க எழுதி வச்ச கடிதத்தை பார்த்தீங்கன்னா என்னால படிக்க முடியல அதனால, அந்த சுமையை ஏன் அந்த பிள்ளை மேல ஏத்துறீங்க, பிள்ளைகள் ஆசைப்படுற மாதிரி படிக்கட்டும். அந்த பிள்ளைகள் மேல அழுத்தத்தை உண்டாக்காதீங்க அப்படிங்கறத  பெற்றோர்களுக்கும் நம்ம வந்து நிச்சயமா விழிப்புணர்வு கொண்டு வரணும் என்பது தான் என்னுடைய கருத்து. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு  அழுத்தம் கொடுக்க வேண்டாம். அவர்களுக்கு பிடிச்ச பாடம் இதுதான் படிக்கனுன்ற மாதிரி வற்புறுத்தவும் கூடாது. அந்த இலக்கை நோக்கி மட்டுமே போகனும் சொல்லிட்டு பிள்ளைகளை வழி காட்டவும் கூடாது. இதுவாக தான் ஆவேன்னு நினைச்சு உறுதியோடு இருக்காத, கால சூழ்நிலைக்கேற்ற மாதிரி சமயத்துக்கு ஏற்ற மாதிரி என்ன படிச்சாலும் சாதிக்கலாம் என்ற எண்ணத்தை உருவாக்க தான் விழிப்புணர்வு  பண்ணிக்கிட்டு இருக்கோம்” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
K.N.NEHRU : ‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
ABP Premium

வீடியோ

20 ஆண்டுகள் 5 தேர்தல்தோல்வியே சந்திக்காத இளைஞன்மோடியின் புதிய Boss
”ஓசூருக்கு எதுக்கு AIRPORT?”தட்டித்தூக்கிய நாயுடு பின்னணியில் மோடி?
OVERTAKE செய்த ஓட்டுநர் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து மதுரையில் பரபரப்பு
ஐயப்பன் கோயில் நடை அடைப்பு மகர விளக்கு சீசன் நிறைவு அடுத்த தரிசனம் எப்போது? | Sabarimalai | Sabarimala Devotees | Temple | Festival | Tamil News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
K.N.NEHRU : ‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
தேனியில் மின் தடை: நாளை முதல் 24ஆம் தேதி வரை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
தேனியில் மின் தடை: நாளை முதல் 24ஆம் தேதி வரை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
உச்சத்தை தொடும் தங்கம் விலை... கிடுக்கிப்பிடி போட தயாராகும் மத்திய அரசு
உச்சத்தை தொடும் தங்கம் விலை... கிடுக்கிப்பிடி போட தயாராகும் மத்திய அரசு
OPS: ஓபிஎஸ்ஸை அம்போ என விட்டு சென்ற அந்த 3 பேர்.! இப்போ எங்கே இருக்காங்க தெரியுமா.?
ஓபிஎஸ்ஸை அம்போ என விட்டு சென்ற அந்த 3 பேர்.! இப்போ எங்கே இருக்காங்க தெரியுமா.?
மாணவர்களே! கலைப் போட்டிகளில் கலக்குங்க! குரலிசை, நடனம், ஓவியம் என அசத்தலாம்- பரிசுத்தொகை உண்டு!
மாணவர்களே! கலைப் போட்டிகளில் கலக்குங்க! குரலிசை, நடனம், ஓவியம் என அசத்தலாம்- பரிசுத்தொகை உண்டு!
Embed widget