மேலும் அறிய

மாணவர்களே! கலைப் போட்டிகளில் கலக்குங்க! குரலிசை, நடனம், ஓவியம் என அசத்தலாம்- பரிசுத்தொகை உண்டு!

09-12, 13-16 ஆகிய வயது பிரிகளில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவிலான கலைப் போட்டிகள் நடத்தி பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்பட உள்ளன.

பள்ளி மாணவ, மாணவியருக்கு 2025-2026ஆம் ஆண்டில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் கலைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

தமிழ்நாடு அரசின் கலைப் பண்பாட்டு துறையின் தமிழ்நாடு ஜவஹர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 05 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு கலை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. சிறார்களிடையே மறைந்துள்ள கலைத்திறன்களை வெளிக்கொணரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய நான்கு கலைப் பிரிவுகளிலும் 5-8, 09-12, 13-16 ஆகிய வயது பிரிகளில் கலைப்போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி ஊக்குவித்து வருகிறது.

பரிசுத் தொகை, பாராட்டுச் சான்று

மேலும் 09-12, 13-16 ஆகிய வயது பிரிகளில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவிலான கலைப் போட்டிகள் நடத்தி பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்பட உள்ளன.

முதற்கட்டமாக 05-08, 09-12, 13-16 ஆகிய வயது பிரிவுகளில் சென்னை மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் 07.02.2026 அன்று சனிக்கிழமை காலை 09.00 மணியளவில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் பிரிவில் கலை போட்டிகள் நடைபெற உள்ளன.

கலைப் போட்டிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி வளாகம், டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை 600028 யில் நடைபெற உள்ளது போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்களின் பெயர், வயது, பிறந்த தேதி, வீட்டு முகவரி, பள்ளியின் முகவரி ஆகியவை அடங்கிய விவரம் உடன் கொண்டு வர வேண்டும்.

போட்டி விதிகள்

போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பங்கேற்புக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு:

  1. பரத நாட்டியம் (செவ்வியல்)

பரத நாட்டியம், குச்சிப்புடி,மோகினி ஆட்டம் போன்ற நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மேற்கத்திய நடனம் மற்றும் குழு நடனங்களுக்கு அனுமதியில்லை. குறுந்தகடுகள், பென்டிரைவ் ஆகியவற்றினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றைப் போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். நடனமாட அனுமதிக்கப்படும்.

குறைந்தபட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை

  1. கிராமிய நடனம் ( நாட்டுப்புற கலை )

தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமிய நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கிராமிய இசை பாடல்கள் காண திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மற்றும் குழு நடனங்கள் அனுமதி இல்லை. குறுந்தகடுகள், பென்டிரைவ் ஆகியவற்றினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றைப் போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.

  1. குரலிசை

கர்நாடக இசை பாடல்கள்,தேசிய பாடல்கள், சமூக விழிப்புணர்ச்சி பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். மேற்கத்திய இசை, திரைப்படப் பாடல்கள் பிறமொழி பாடல்கள் குழு பாடல்களுக்கு அனுமதி இல்லை. குறைந்தபட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை அனுமதிக்கப்படும்.

  1. ஓவியம்

40 x 30 செ.மீ அளவுள்ள சவகர் சிறுவர் மன்றத்தால் வழங்கப்படும் ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில், க்ரையான், வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர் மற்றும் ஆயில் கலர், பெயின்ட்டிங் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமையலாம். வண்ணங்கள், தூரிகைகள் உட்பட தங்களுக்கு தேவையானவற்றை போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும். குழுவாக ஓவியங்கள் வரைய அனுமதி இல்லை. ஒவ்வொரு வயது பிரிவுக்கும் தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு 044-28192152 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Embed widget