மேலும் அறிய

மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் !

மதுரையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் – வைகை கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்.
 
வைகையில் வெள்ள அபாய எச்சரிக்கை
 
வடகிழக்கு பருவமழையால் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக நேற்று முன்தினம் 71 அடி உயரமுள்ள வைகைஅணை 69 அடி வரை எட்டியதால் அணையில் இருந்து விநாடிக்கு 3,600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் நேற்று காலை மதுரை வந்தடைந்தது. இதனையொட்டி வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வைகை ஆறு பாய்ந்தோடும் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையானது விடுக்கப்பட்டு உள்ளது.
 
கால்நடைகளை கட்டிவைக்க வேண்டாம்
 
இதனால் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ள நிலையில் வைகை ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மதுரை சிம்மக்கல் தரைப்பாலம் - விரகனூர் செல்லும் இணைப்பு சாலையில் இருகரைகளை உரசியவாறு தண்ணீர் செல்கிறது. இதனையடுத்து மதுரை வைகையாற்று பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் கால்நடைகளை பாதுகாப்பாக பராமரிக்கவும், கால்நடைகளை ஆற்றில் இறக்கிவிட வேண்டாம் எனவும், நீர்நிலைகளின் அருகில் கால்நடைகளை கட்டிவைக்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
 
வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தீபாவளி விடுமுறை என்பதால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வைகை ஆற்றில் இறங்கி குளிக்க நேரிடும் அபாயம் உள்ள நிலையில் வைகை ஆற்றின் இரண்டு கரையோரப் பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.                                                                                                                                                                                                                                                                                                               
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Puducherry Leave: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Puducherry Leave: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
RMC on Cyclone: வங்கக் கடலில் புயல்; சென்னையில் மிக கனமழை; வானிலை மைய தென் மண்டல தலைவர் அமுதா கூறியது என்ன.?
வங்கக் கடலில் புயல்; சென்னையில் மிக கனமழை; வானிலை மைய தென் மண்டல தலைவர் அமுதா கூறியது என்ன.?
H-1B Visa Fee Exemption: அப்பாடா.! H1-B விசா கட்டணத்தில் விலக்கு அறிவித்த வெள்ளை மாளிகை; யாருக்கெல்லாம் தெரியுமா.?
அப்பாடா.! H1-B விசா கட்டணத்தில் விலக்கு அறிவித்த வெள்ளை மாளிகை; யாருக்கெல்லாம் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தேஜஸ்வி நேருக்கு நேர்! அடித்துக்கொள்ளும் RJD-காங்கிரஸ்!
ஆரம்பிக்கலாங்களா... 6 நாட்களுக்கு கனமழை! எந்தெந்த இடங்களுக்கு வார்னிங்
Trump warns Modi | பதிலடி கொடுத்த இந்தியா!
Children gift to Sanitation workers |தூய்மை பணியாளர்களுக்கு giftசிறுவர்கள் நெகிழ்ச்சி செயல்
Baijayant Panda Anbumani | கண்டிசன் போட்ட பாண்டாகறார் காட்டும் அன்புமணிபாமக Game Starts!25+1

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Puducherry Leave: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Puducherry Leave: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
RMC on Cyclone: வங்கக் கடலில் புயல்; சென்னையில் மிக கனமழை; வானிலை மைய தென் மண்டல தலைவர் அமுதா கூறியது என்ன.?
வங்கக் கடலில் புயல்; சென்னையில் மிக கனமழை; வானிலை மைய தென் மண்டல தலைவர் அமுதா கூறியது என்ன.?
H-1B Visa Fee Exemption: அப்பாடா.! H1-B விசா கட்டணத்தில் விலக்கு அறிவித்த வெள்ளை மாளிகை; யாருக்கெல்லாம் தெரியுமா.?
அப்பாடா.! H1-B விசா கட்டணத்தில் விலக்கு அறிவித்த வெள்ளை மாளிகை; யாருக்கெல்லாம் தெரியுமா.?
Japan New PM Takaichi: ஜப்பானின் முதல் பெண் பிரதமர்; வரலாறு படைத்த சனே டகாய்ச்சி - காத்திருக்கும் சவால்கள்
ஜப்பானின் முதல் பெண் பிரதமர்; வரலாறு படைத்த சனே டகாய்ச்சி - காத்திருக்கும் சவால்கள்
Gold Rate 21st Oct.: என்னய்யா இது.?! காலையில் உயர்ந்து மாலையில் குறைந்த தங்கம் - தற்போதைய விலை என்ன.?
என்னய்யா இது.?! காலையில் உயர்ந்து மாலையில் குறைந்த தங்கம் - தற்போதைய விலை என்ன.?
Chembarambakkam Lake: செம்பரம்பாக்கம் ஏரி வெள்ள அபாய எச்சரிக்கை! கரையோர மக்களே உஷார்! முக்கிய அறிவிப்பு
செம்பரம்பாக்கம் ஏரி வெள்ள அபாய எச்சரிக்கை! கரையோர மக்களே உஷார்! முக்கிய அறிவிப்பு
Trump Vs China Tariff: நவம்பர் 1-ல் இருந்து வரி 155% ஆகிடும் ஜாக்கிரதை; சீனாவை மீண்டும் சீண்டிய ட்ரம்ப்
நவம்பர் 1-ல் இருந்து வரி 155% ஆகிடும் ஜாக்கிரதை; சீனாவை மீண்டும் சீண்டிய ட்ரம்ப்
Embed widget