மேலும் அறிய
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... த.வெ.க.,வை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது - ஆர்.பி.உதயகுமார் !
75 ஆண்டுகள் கொண்ட திமுக தற்போது மேயரை கூட தேர்வு செய்ய முடியாத நிலையில் முடங்கி போய்விட்டதா? - என ஆர்.பி.உதயகுமார் கேள்வி.

ஆர்.பி.உதயகுமார்
Source : whatsapp
கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10 லட்ச ரூபாய் ஆனால் வடகிழக்கு பருவ மழையில் உயிரிழந்தவர்களுக்கு நான்கு லட்சமா?
தமிழ்நாடு எதையும் முனைப்பு காட்ட வில்லை.
அமாவாசையை முன்னிட்டு அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் மதுரையின் அட்சயப் பாத்திரம் ட்ரஸ்ட் சார்பில் மதுரை தெப்பக்குளம் முத்தீஸ்வரர் கோவிலில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் அன்னதானம் வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது..,” ஏ.ஐ .தொழில்நுட்ப நிறுவனம் அமைக்க 87 ஆயிரம் கோடி அளவில் ஆந்திராவில் கூகுள் நிறுவனம் அமைத்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி மதுரையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை அவரிடம் முறையாக அனுமதி கேட்டு இருந்தால் இன்றைக்கு 87 ஆயிரம் கோடி முதலீடு தமிழ்நாட்டுக்கு கிடைத்திருக்கும். இந்த ஏஐ.தொழில் நுட்பத்திற்காக ஆந்திரா விசாகப்பட்டினத்தில் 500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது, இலவச மின் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், மறைமுகமாக 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். அரசுக்கு ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். இன்றைக்கு அக்கறை இல்லாத தன்மையால் கோட்டை விட்டனர். ஆனால் அதானி பரிந்துரையால் தான் ஆந்திராவுக்கு சென்றது என்று சட்டமன்றத்தில் அமைச்சர் பொறுப்பு இல்லாமல் பேசுகிறார். இன்றைக்கு ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் தொழில் துறையில் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வருகிறது. ஆனால் தமிழ்நாடு எதையும் முனைப்பு காட்ட வில்லை.
பேரிடர் நிவாரணத்தில் 4 லட்ச ரூபாய் வழங்கலாம்
கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10 லட்ச ரூபாய் அரசு கொடுக்கிறது. ஆனால் இன்றைக்கு திருவண்ணாமலை, கடலூர் போன்ற பகுதிகளில் மின்னல் தாங்கி ஐந்து பேர் இறந்து போய் உள்ளனர். அவர்களின் நிலைமை அறிந்து பத்து லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கலாம். பேரிடர் நிவாரணத்தில் 4 லட்ச ரூபாய் வழங்கலாம் ஆனால் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ஒரு கோடி வரை வழங்கலாம்.
மேயரை கூட நியமிக்க முடியாமல் திமுக அரசு முடங்கி போய்விட்டது.
தற்பொழுது மதுரையில் மேயரை நியமிக்க முடியவில்லை. 75 ஆண்டுகள் கொண்ட மாபெரும் கட்சி திமுக. ஆனால் இன்றைக்கு 4 மாமன்ற உறுப்பினர் கொண்ட கம்யூனிஸ்ட் சேர்ந்த துணைமேயர் தான் தற்போது மதுரையை நிர்வாகம் செய்து வருகிறார். இன்றைக்கு மேயரை நியமித்தால் தானே வடகிழக்கு பருவமழை எதிர் கொள்ள முடியும். ஆனால் இன்றைக்கு மேயரை கூட நியமிக்க முடியாமல் திமுக அரசு முடங்கி போய்விட்டது. திமுகவை வீழ்த்த அதிமுகவுடன் சேர வேண்டும். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை மட்டுமல்லாது தவேகவையும் ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது” எனவும் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















