மேலும் அறிய
மதுரையில் கனமழை: சாலைகளில் தேங்கிய நீர்.. வானிலை மையம் எச்சரிக்கை
மழை சமயத்தில் பொதுமக்கள் தேவையற்ற வெளிவருவதை தவிர்க்கவும், வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

மழை கோப்புப்படம்
Source : twitter
வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் என்பது மதுரை மாநகரின் வைகையாற்றின் இரு கரைகளையும் தொட்டுச் செல்கிறது.
மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை என்பது பெய்து வந்தது. இதனிடையே மதுரை உட்பட தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கணிசமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 5 மணி முதல் லேசான மழை பெய்ய தொடங்கியது. பின்னர் மழையின் அளவு படிப்படியாக உயர்ந்து தற்போது விதமான மழை பெய்து வருகிறது.
தண்ணீர் மதுரை மாநகரின் வைகையாற்றின் இரு கரைகளையும் தொட்டுச் செல்கிறது.
மதுரை மாநகர் பகுதிகளான திருப்பரங்குன்றம், கோரிப்பாளையம், சிம்மக்கல்,தெப்பக்குளம், ரேஸ்கோர்ஸ் காலனி, டி.ஆர்.ஓ., காலனி, காமராஜர் சாலை, ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட மாநகர் பகுதிகளிலும் திருமங்கலம், மேலூர், சோழவந்தான், வாடிப்பட்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் காலை முதல் மழை என்பது பெய்து வருகிறது. அதிகாலையில்பிருந்தே பெய்து வரும் மழையின் காரணமாக சாலையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்று வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே போல வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் என்பது மதுரை மாநகரின் வைகையாற்றின் இரு கரைகளையும் தொட்டுச் செல்கிறது.
சிவகங்கை மாவட்டத்தில் மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அதே போல் மதுரையை சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சுற்றியுள்ள நகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மிதமான சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்றும் விடாமல் சாரல் மழை பெய்த நிலையில், இன்றும் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் வழுக்கலாகி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிவகங்கை மாவட்டத்தில் சில இடங்களில் கனமழையுடனும், பல இடங்களில் சாரல் மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.'
எச்சரிக்கை
இதனால் பொதுமக்கள் தேவையற்ற வெளிப்படையைத் தவிர்க்கவும், வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement




















