மேலும் அறிய
Advertisement
டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்
டங்ஸ்டன் சுரங்கத்திட்ட விவகாரம்: அடுத்த கட்டம் குறித்து பேசிமுடிவு செய்வதற்காக அழகர்கோயிலில் கூடிய 48 கிராம மக்கள்.
டங்க்ஸ்டன் சுரங்கத் திட்டத்ததின் பாதிப்புகளைத் தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய அரசின் டங்க்ஸ்டன் ஏல அறிவிப்பை முழுமையாக இரத்து செய்யவும் தொல்லியல், பல்லுயிர் பாதுகாப்பு பகுதிகள் அடங்கிய மதுரை மாவட்டத்தை பாரம்பரிய பண்பாட்டு பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி தரக்கூடாது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொள்கை முடிவை அறிவித்து சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி அரிட்டாபட்டி தாய் கிராமங்களான 48 கிராம மக்கள் அழகர் மலையில் ஒன்று கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.
அழகர்கோயிலில் ஒன்றுகூடிய மக்கள்
மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்காக வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு ஏலம் விடப்பப்பட்ட விவகாரம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில் இதுகுறித்து விவாதித்து முடிவு எடுப்பதற்காக 26ந்தேதி அழகர்கோயிலில் கூட உள்ளதாக கடந்த வாரத்தில் அரிட்டாபட்டி மந்தையில் கூடிய சுற்றுவட்டார மக்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று செவ்வாய்கிழமை அ.வல்லாளபட்டி, கிடாரிபட்டி, அரிட்டாபட்டி, கல்லம்பட்டி, மாங்குளம், கள்ளந்தரி, மேலவளவு, சூரக்குண்டு , சுக்காம்பட்டி, எட்டிமங்கலம், நரசிங்கம்பட்டி, தெற்குதெரு, வெள்ளரிப்பட்டி உள்ளிட்ட 48 ஊர்களை சார்ந்த மக்கள் நாட்டார்கள் முன்னிலையில் ஒன்று கூடி டங்ஸ்டன் கனிமத்திட்டத்தால் திட்டப் பகுதிக்குள்ளும், திட்டப்பகுதியை ஒட்டியும் வரும் சுமார் 50 ஊர்களின் குடியிருப்பு பகுதிகள், விவசாயம், பெரியாறு பாசன கால்வாய், நீர்நிலைகள், வழிபாட்டு த் தலங்கள், வரலாற்றுச் சின்னங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பது குறித்து பேசி முடிவுகள் எடுப்பதோடு, மத்திய மாநில அரசுளுக்கு தங்கள் நிலைப்பாடு குறித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள்.
போராட்டங்களை மேற்கொள்ளலாம் என்கின்ற ஆலோசனை நடத்தினர்
அதே போல் 2015 ஹெக்டேர் அதாவது சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பை ஸ்டெர்லைட் புகழ் வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஸிங் நிறுவனம் (Hindustan Zinc) டங்ஸ்டன் (Tungsten) கனிமம் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை எடுத்து இருக்கிறது. இதற்கு மேற்கண்ட ஊர் மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மேற்கண்ட ஊர்களைச் சார்ந்த பிரதிநிதிகள் அரிட்டாப்பட்டியில் ஒன்று கூடி சுரங்கம் அமையாமல் இருப்பதற்கு என்ன வகையான போராட்டங்களை மேற்கொள்ளலாம் என்கின்ற ஆலோசனை நடத்தினர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
இதைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
ஆன்மிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion