Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant : பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் நாங்கள் ஜஸ்ஸி பாயை மட்டும் தான் நம்புகிறோம் என்று கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் ”நாங்கள் ஜஸ்ஸி பாயை மட்டும் தான் நம்புகிறோம் என்று கூறியிருப்பது ரோகித் சர்மா கேப்டன்சியில் அதிருப்தியில் உள்ளாரா என கேள்வியை கிளப்பியுள்ளது.
பார்டர் கவாஸ்கர் தொடர்:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இந்த போட்டியில் டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செயத இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பிறகு பேட்டிங்கை ஆடிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஜஸ்பீரித் பும்ராவின் புயலில் சிக்கி 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ்சில் அபாரமாக விளையாடியது, தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் முதல் விக்கெட்டுக்கு 201 ரன்கள் சேர்த்தது , கே.எல் ராகுல் 77 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 161 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக வந்த விராட் கோலி ஃபார்ம்முக்கு தடுமாறி வந்த நிலையில் இந்த போட்டியில் ஆபாரமாக ஆடி தனது முப்பாதாவது சதத்தை பதிவு செய்தார். கோலி சதம் அடித்தவுடன் இந்திய அணி டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணிக்கு இலக்காக 534 ரன்கள் நிர்ணயித்தது.
ஆஸ்திரேலியா தோல்வி:
அடுத்து கடின இலக்குடன் ஆஸ்திரேலிய களமிறங்கிய நிலையில் 12 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்ததாக ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி சரிவில் இருந்து மீட்க போராடியது. ஆனால் ஸ்டீவன் ஸ்மித் 17 ரன்கள் வெளியேறிய நிலையில், மிட்செல் மார்ஷ்வுடன் ஜோடி சேர்ந்தார். சிறிது நேரம் போராடிய நிலையில் ஹேட் 89 ரன்களிலும், மார்ஷ் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 238 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி இது வரை பெர்த் மைதானத்தில் தோல்வியே சந்திக்காத நிலையில் முதல் முறையாக அந்த மைதானத்தில் தோல்வியை தழுவியது.
இதையும் படிங்க:IPL 2025 Unsold Players: "வார்னர் டூ பார்ஸ்டோ" அடிமாட்டு விலைக்கு கூட போகாத அதிரடி மன்னர்கள்!
அதிருப்தியில் பண்ட்:
இந்த நிலையில் போட்டிக்கு பிறகு ரிஷப் பண்ட் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நாங்கள் ஜாஸ்ஸி பாய் (பும்ரா), மியான்( சிராஜ்), ராணா, கேஎல் பாய்( ராகுல்), YJ( ஜெய்ஸ்வால்) மற்றும் விராட் பாய் ஆகியோரை மட்டுமே நம்புகிறோம்.. ஏனெனில் அவர்கள் கேம் சேஞ்சர் பிளேயர்கள். இவ்வாறு அவர் கூறியிருப்பது அவர் ரோகித் சர்மாவின் மீது அதிருப்தியில் உள்ளாரா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.