மேலும் அறிய

திமுக கூட்டத்தில் வழங்கிய பிரியாணி சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, மயக்கம் - மதுரையில் பரபரப்பு

திமுக வழங்கிய பிரியாணி சாப்பிட்ட சிறு குழந்தைகள் பள்ளி மாணவர்கள் 40 பேர் உட்பட 100க்கும்  மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி - திருமங்கலம் அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளிக்குடி அருகே வில்லூரில் திமுகவினர் வழங்கிய பிரியாணியை சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு புட் பாய்சன் காரணமாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கள்ளிக்குடி, விருதுநகர், வில்லூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மதுரை தி.மு.க., கூட்டத்தில் வழங்கப்பட்ட பிரியாணி பார்சல்

தி.மு.க., சார்பில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி தாலுகா வில்லூரில் நேற்று பொது உறுப்பினர் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். இதையடுத்து அனைவருக்கும் நேற்று முன்தினமே ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் சிக்கன் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று மதியம் கூட்டம் முடிந்தவுடன் அனைவருக்கும் சில்வர் தட்டு மற்றும் பிளாஸ்டிக் டப்பாவில் வைக்கப்பட்ட சிக்கன் பிரியாணி பார்சல் வழங்கப்பட்டுள்ளது.

- Sivagangai: ”முடக்கி எந்திரிக்க வீடும், வேலையும் கிடைச்சால் போதும்” - பார்வை சவால் கொண்ட மாணவியின் கோரிக்கை !

பிரியாணி பார்சல் உணவை சாப்பிட்டதால் பிரச்னை ஏற்பட்டதா?

பிரியாணியை சாப்பிட்ட சிலர் கூடுதலாக சிக்கன் பிரியாணி பார்சல் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டில் வைத்து மாலையில் பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டு, வீட்டிற்கு வந்த தங்களது பிள்ளைகளுக்கும் பிரியாணி கொடுத்துள்ளனர். இந்த நிலையில் பிரியாணி சாப்பிட்ட நூறுக்கும் மேற்பட்டோருக்கு நேற்று இரவு எட்டு மணிக்கு மேல் திடீரென வாந்தி மயக்கத்தால் அவதிப்பட்டனர். இதில் மூன்று வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட 40க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அனைவரும் வில்லூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சென்றனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால். அவர்கள் 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கள்ளிக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிறு குழந்தைகள் பத்துக்கும் மேற்பட்டோர் உட்பட 29 பேர் விருதுநகர் மருத்துவமனையிலும், 30 பேர் கள்ளிக்குடி மருத்துவமனையிலும், மீதமுள்ள 82பேர் வில்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உணவு விஷமாக மாறியுள்ளது, காலதாமதம் தான் காரணமா?

பொதுமக்களுக்காக தயார் செய்யப்பட்ட பிரியாணி சாப்பிடுவதற்கு காலதாமதம் ஏற்பட்டதால், உணவு விஷமாக மாறி உள்ளது. அதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. வேறு ஏதும் பெரிய பாதிப்பு இல்லை. என, மருத்துவ வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணியை சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் ஏ.எஸ்.பி அன்சுல் நாகர் தலைமையிலான வில்லூர் போலீசார் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Kunrakudi Temple Elephant: தீ விபத்தில் சிக்கிய குன்றக்குடி கோயில் யானை உயிரிழப்பு - சோகத்தில் பக்தர்கள்

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Arvind Kejriwal: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்! டெல்லி அரசியலில் புது திருப்பம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Chembarambakkam Lake: 6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
Naan Mudhalvan scheme: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 1 லட்சம் பேருக்குப் பணி: அமைச்சர் கோவி செழியன் பெருமிதம்!
Naan Mudhalvan scheme: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 1 லட்சம் பேருக்குப் பணி: அமைச்சர் கோவி செழியன் பெருமிதம்!
சாய் பல்லவியவே கோபப்பட வச்சீட்டாங்களே...சைவத்திற்கு மாறினாரா சாய் பல்லவி ?
சாய் பல்லவியவே கோபப்பட வச்சீட்டாங்களே...சைவத்திற்கு மாறினாரா சாய் பல்லவி ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand | Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Chembarambakkam Lake: 6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
Naan Mudhalvan scheme: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 1 லட்சம் பேருக்குப் பணி: அமைச்சர் கோவி செழியன் பெருமிதம்!
Naan Mudhalvan scheme: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 1 லட்சம் பேருக்குப் பணி: அமைச்சர் கோவி செழியன் பெருமிதம்!
சாய் பல்லவியவே கோபப்பட வச்சீட்டாங்களே...சைவத்திற்கு மாறினாரா சாய் பல்லவி ?
சாய் பல்லவியவே கோபப்பட வச்சீட்டாங்களே...சைவத்திற்கு மாறினாரா சாய் பல்லவி ?
Teachers Leave: இனி அனைத்து ஆசிரியர்களும் அனுமதி பெற்றுத்தான் விடுப்பு எடுக்க வேண்டுமா? சுற்றறிக்கையால் சர்ச்சை!
Teachers Leave: இனி அனைத்து ஆசிரியர்களும் அனுமதி பெற்றுத்தான் விடுப்பு எடுக்க வேண்டுமா? சுற்றறிக்கையால் சர்ச்சை!
இது சமத்துவ கொள்கை மட்டுமல்ல; ஆட்சியின் கொள்கை: பெரியார் விழாவில் ஸ்டாலின் முழங்கியது என்ன?
இது சமத்துவ கொள்கை மட்டுமல்ல; ஆட்சியின் கொள்கை: பெரியார் விழாவில் ஸ்டாலின் முழங்கியது என்ன?
Minister Senthil Balaji: அண்ணாமலை குறித்து கேள்வி...
அண்ணாமலை குறித்து கேள்வி... "சிலருக்கு ஊரில் வேலை வெட்டி இல்லை" கடுப்பான செந்தில் பாலாஜி
Dhanusu New Year Rasi Palan: தனுசுக்கு ஜெயமே! 2025ல் நினைத்தது எல்லாம் நடக்கப்போகுது - ஆண்டு ராசிபலன்
Dhanusu New Year Rasi Palan: தனுசுக்கு ஜெயமே! 2025ல் நினைத்தது எல்லாம் நடக்கப்போகுது - ஆண்டு ராசிபலன்
Embed widget