மேலும் அறிய

PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!

முனைவர் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று ஆதிதிராவிடர் நலத்துறை அறிவித்த நிலையில், அதற்கு விண்ணப்பிப்பது எப்படி, என்ன தகுதி, விதிமுறைகள் பற்றி காணலாம்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் முழுநேர முனைவர் பட்டப் படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதி திராவிடர் இன மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.1,00,000/- வீதம் 2000 மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் என அரசு ஆணையிட்டுள்ளது.

எனவே ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்த முழுநேர முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) பயிலும் புதிய / புதுப்பித்தல் (Fresh / Renewal) மாணவர்கள் https://adwphdscholarship.in/ என்ற இணையத்தின் மூலம் கீழ்க்கண்ட விதிமுறைகளுக்குட்பட்டு 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

விதிமுறைகள் இவைதான்

1 தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு (Ph.D.) மேற்கொள்ளும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர். பகுதி நேர ஆராய்ச்சி மாணவர்கள் பயன்பெற இயலாது.

2 முழுநேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கருக்கு அவர்கள் கல்விப்பயிலும் பல்கலைக் கழகத்தால் அனுமதிக்கப்பட்ட கால அளவிற்குள் (அல்லது) மாணாக்கர் ஆய்வேட்டை (Thesis) சமர்ப்பிக்கும் ஆண்டு வரை (அல்லது) அதிகப்பட்சமாக ஐந்தாண்டுகள், இதில் எதில் முந்தையதோ அதுவரையில் மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படும்.

  1. ஏற்கனேவ இத்திட்டத்தின்கீழ் ஊக்கத்தொகை பெற்று நடப்பாண்டிற்கு புதுப்பித்தல் (Renewal) பெற விண்ணப்பிக்கும் மாணாக்கருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்ட பின் மீதமுள்ள காலி இடங்களுக்கு முதலாமாண்டிற்கு விண்ணப்பிக்கும் புதிய (Fresh) மாணாக்கருக்கு கீழ்க்கண்டவாறு பாடப்பிரிவு வாரியான ஒதுக்கீட்டின்படி தகுதிகளுக்குட்பட்டு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும். இதா

கலை (Linguistics) - 10% இட ஒதுக்கீடு

கலை (Education, Commerce, Management, Architecture, Mass Communication, Design) - 20% இட ஒதுக்கீடு

அறிவியல் (Pure Science) - 20%

பயன்பாட்டு அறிவியல் (Applied Science, Medical, Engineering) - 40%

முந்தைய பிரிவுகளில் இடம் பெறாத பாடப்பிரிவுகள் - 10%

  1. மேற்கண்ட பிரிவுகளில் பெறப்படும் விண்ணப்பங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் கூடுதலாகவும், குறைவாகவும் அல்லது விண்ணப்பங்கள் பெறப்படாத நிலையில் அதனை அதிக விண்ணப்பங்கள் வரப்பெற்ற மற்ற பாடப்பிரிவுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.
  2. ஒரு பாடப்பிரிவில் அதிக விண்ணப்பங்கள் பெறப்படும் பட்சத்தில், உலகளாவிய அளவில் QS தர எண் பெற்ற கல்வி நிறுவனங்கள், University Grants Commission (UGC) National Institutional Ranking Framework (NIRF) ஆகிய நிறுவனங்களின் தரவரிசையில் இடம்பெற்றுள்ள பல்கலைக்கழங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  3. அறிவியல் சார்ந்த பாடப்பிரிவுகளில் Advance Science, மருத்துவம் (Medical) மற்றும் தொழில்நுட்பம் (Technology) போன்ற பாடப்பிரிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  4. மதிப்பெண் அடிப்படையில் பயனாளிகளைத் தேர்வு செய்யும் போது. ஒரு இடத்திற்கு இரண்டுக்கும் மேற்பட்டோர் ஒரே விழுக்காடு மதிப்பெண் பெற்றிருப்பாராயின். மாணாக்கர்களின் வயதின் அடிப்படையில் வயதில் மூத்தோருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும்.


PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!

என்ன தகுதிகள்?

  1. இத்திட்டத்தின்கீழ் பயனடைய நிர்ணயிக்கப்பட்டுள்ள குடும்ப ஆண்டு வருமான வரம்பான ரூ.8.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  1. இத்திட்டத்தின் கீழ் கல்வி ஊக்கத் தொகை வேண்டி முதுகலைப் பட்டப் படிப்பில் 55% விழுக்காடு பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. வயது வரம்பு ஆண்களுக்கு 50 மிகாமலும் மற்றும் பெண்களுக்கு 55 மிகாமலும் இருக்க வேண்டும்.
  3. இத்திட்டத்தின் கீழ் தகுதி பெறும் மாணாக்கரில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இதர நிபந்தனைகள்:

  1. விண்ணப்பத்துடன் சாதிச்சான்று, வருமானச் சான்று, கல்விச் சான்று, ஆதார் விவரம் மற்றும் முனைவர் பட்டப்படிப்பிற்கான நுழைவு சான்று ஆகிய சான்றிதழ்களை இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
  2. பல்கலைக் கழகம் / கல்லூரிகளில் ஊக்கத்தொகை / ஊதியத்துடன் கூடிய படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாது.
  3. கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் (ஊதியமில்லா விடுப்பில் இருந்தாலும் கூட) ஊக்கத்தொகை பெற தகுதியற்றவராவர்.
  4. மாணவரின் ஆராய்ச்சி திருப்திகரமாக இல்லை என தெரிய வந்தால், அம்மாணாக்கருக்கு கல்வி ஊக்கத்தொகை நிறுத்தப்படும்.
  5. ஓர் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் அடுத்த ஆண்டு மட்டுமே விண்ணப்பிக்க இயலும். மேலும் கடந்தாண்டு ஊக்கத்தொகை பெற்ற மாணாக்கர் மட்டுமே புதுப்பித்தல் (Renewal) மாணாக்கராக கருத முடியும்.
  6. கல்வி நிறுவன முதல்வரது கையொப்பம் மற்றும் பல்கலைக்கழக பதிவாளரின் பரிந்துரையுடன் விண்ணப்பம் வரப்பெற வேண்டும். தவறும் பட்சத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
  7. தவறான தகவல்களுடன் விண்ணப்பித்து கல்வி ஊக்கத்தொகை பெற்ற மாணாக்கர்கள் இத்திட்டத்தின் கீழ் நீக்கப்படுவர். மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி ஊக்கத்தொகை அரசுக்கு திரும்ப செலுத்த வேண்டும்.
  8. இதற்கு விண்ணப்பிக்க ஜனவரி 31 கடைசித் தேதி ஆகும்.

கூடுதல் தகவல்களுக்கு: https://adwphdscholarship.in/

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?

வீடியோ

PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Embed widget