BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
BiggBoss Tamil 9 : பிக்பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டியோடு வெளியேறிய கானா வினோத் முதல் முறையாக வீடியோ வெளியிட்டுள்ளார்

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து 18 லட்ச பணப்பெட்டியுடன் கானா வினோத் வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த பின் முதல்முறையாக கானா வினோத் வீடியோ வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தபிறகு ரசிகர்களுக்கு தனக்கு கொடுத்திருந்த வரவேற்பைப் பார்த்து தான் ரொம்ப வருத்தப்பட்டதாக கானா வினோத் இந்த வீடியோவில் கூறியுள்ளார்.
பிக்பாஸ் தமிழில் 9 ஆவது சீசன் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. அரோரா சிங்க்ளேர் , கானா வினோத் , விக்கல்ஸ் விக்ரம் , சானட்ரா , சபரி , திவ்யா கணேசன் ஆகிய அறு பேர் ஃபைனல்ஸை நோக்கி காத்திருந்தன. இப்படியான நிலையில் கடந்த வாரம் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்த சீசனில் தொடக்கம் முதல் இறுதிவரை ரசிகர்களை கவர்ந்த போட்டியாளராக இருந்தவர் கானா வினோத். மற்ற போட்டியாளர்களை காட்டிலும் வாக்குகளில் கானா வினோத் பல மடங்கு லீடிங்கில் இருந்தார். நிச்சயமாக அவர்தான் இந்த ஆண்டின் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் கடந்த வாரம் நடந்த பணப்பெட்டி டாஸ்க்கில் 18 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு கானா வினோத் வெளியேறினார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.
இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருந்தால் டைட்டில் வின்னராக வேண்டியவர் அவசரப்பட்டாரே என்று அவரது ரசிகர்கள் புலம்பி வந்தார்கள். மேலும் கானா வினோத் தான் வெற்றிபெறுவான் என்று தெரிந்தே அரோரா அவரை பணப்பெட்டியை எடுத்து சென்றுவிட தூண்டியதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வந்தார்கள். இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக கானா வினோத் முதல் முறையாக வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
கானா வினோத் வீடியோ
" பிக்பாஸ் விட்டு வந்ததில் இருந்து நான் வெளியிடும் முதல் வீடியோ இது. என் சார்பாகவும் என் குடும்பத்தின் சார்பாகவும் நான் உங்கள் பாதம் தொட்டு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் குடும்பத்தில் ஒருவனாக எனக்கு ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள். இதற்கெல்லாம் நான் எப்படி கைமாறு செய்யப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. நான் செய்தது தப்பா சரியா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் வெளியே வந்து பார்த்தபின் தான் நான் ரொம்ப வருத்தப்பட்டேன். நான் பெட்டியை எடுத்து வெளியேறியதால் என் சக போட்டியாளர் மீது பழி வந்தது. யார் சொல்லியும் நான் பெட்டியை எடுக்கவில்லை. அதை நானேதான் எடுத்தேன். என்மீது இருக்கும் பாசத்தால் மற்ற போட்டியாளர்களுக்கு எந்த கெட்ட பெயரும் வரக்கூடாது. பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் யார் ஜெயித்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான். உங்கள் மனதில் எனக்கு ஒரு இடம் கிடைத்திருக்கிறது. டைட்டில் எல்லாம் எனக்கு தேவையில்லை. மக்களிடம் எனக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் தான் எனக்கு முக்கியம் . எனக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை வைத்து இதற்குமேல் நான் சம்பாதிக்கும் பணத்தை வைத்து மக்களுக்கு நல்ல செய்வேன். நன்றி ' என்று கானா வினோத் இந்த வீடியோவில் பேசியுள்ளார்
Latest Insta post — Gana Vinoth thanking fans❤️😍
— Ajith kumar (@AjithPreit8216) January 13, 2026
-Yaaru soliyu na petti (Cash box) Edukala Naaney dha etuthen#BiggBossTamil9 #BiggBoss9Tamil #BiggBossTamil #GanaVinoth
pic.twitter.com/H6Pi6jtiBu





















