மேலும் அறிய
ரஜினியின் 75வது பிறந்தநாள்: திருமங்கலத்தில் ரசிகரின் பிரம்மாண்ட கொண்டாட்டம்.. ரஜினி சிலைக்கு பூஜை !
பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட ஆறு வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து இதனைத் தொடர்ந்து ரஜினியின் சிலைக்கு தீபாராதனை ரஜினி சிலைக்கு காட்டப்பட்டது.

ரஜினி சிலைக்கு பூஜை
Source : whatsapp
திருமங்கலத்தில் ரஜினி கோவிலில் ரஜினியின் 75-வது பிறந்த நாளை மிகப் பிரமாண்டமாக கொண்டாடிய ரஜினியின் தீவிர பக்தர்.
ரஜினியி கோயில்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசித்து வரும் முன்னாள் துணை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் கார்த்திக். இவர் திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார். இவர் சிறுவயது முதலே ரஜினியின் தீவிர ரசிகராவார். ரஜினிகாந்தின் முதல் படமான அபூர்வராகங்களில் இருந்து தற்போது புதிதாக வெளியான படத்தின் போஸ்டர் வரை கார்த்தி தனது வீட்டில் ரஜினிக்கு என்று ஒரு கோவில் போன்ற அமைப்பை தயார் செய்து, அதில் ரஜினியின் பல்வேறு புகைப்படம் வைத்து வழிபட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரஜினியின் 73 வது பிறந்தநாள் முதல் மூன்றடி உயரம் 250 கிலோ கருங்கல்லில் சிலை அமைத்து அன்று முதல் இன்று வரை வழிபட்டு வருகிறார்.
ரஜினியின் 75-வது பவளவிழா
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஜினி சிலைக்கு தொடர்ந்து பூஜைகள் செய்து வருகிறார். ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு ரஜினி சிலையை குலதெய்வமாக வழிபடும் செய்தார் கார்த்தி.
நாளை ரஜினியின் 75-வது பவளவிழா பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றை அடி உயரம் 3 கிலோ கேக் வெட்டியும், உற்சவர் ரஜினி சிலைக்கு நாக கிரீடம் சாத்தியும், மேலும் மூலவர் மற்றும் உற்சவர் ரஜினி சிலைக்கு உத்தரகோசமங்கையில் இருந்து வாங்கப்பட்ட காசு மாலையை சாத்தியும் வழிபாடு நடத்தினார். இது மட்டுமல்லாது ரஜினியின் 75 ஆவது பிறந்தநாள் என்பதால் சுமார் 7500 ரஜினி படங்கள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் ரஜினிக்கு 75 மொழிகளில் பிறந்தநாள் வாழ்த்துக்களும் வைக்கப்பட்டுள்ளது, இதோடு பழைய ரஜினி பிளாக் அண்ட் ஒயிட் போட்டோக்கள் வைத்து 75 என்ற நம்பராக வைக்கப்பட்டுள்ளது. மேலும் glue and glitter ல் ரஜினியின் படம் அனைத்தும் ரஜினியின் பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடிய ரஜினி ரசிகர் கார்த்தி மற்றும் அவரது குடும்பத்தாரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
ரஜினியின் சிலைக்கு தீபாராதனை
இதனை தொடர்ந்து பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட ஆறு வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து இதனைத் தொடர்ந்து ரஜினியின் சிலைக்கு தீபாராதனை காட்டப்பட்டு குடும்பத்தினரோடு ரஜினியை தெய்வமாக வழிபட்டனர். இந்தியாவிலேயே நடிகர் ரஜினிக்கு கருங்கல்லினால் ஆன சிலையை அமைத்து, நாள்தோறும் அதற்கு அபிஷேகமும், தீபஆராதனைகளும் செய்து வரும் கார்த்தியின் செயல் வினோதமானதே. மேலும் தெய்வத்திற்கு அமைப்பது போன்று திருவாச்சியும் நாக கிரீடமும் விளக்குகளும் கோவில் மணியும் அமைத்து வழிபடுவது, மேலும் ஒரு வினோதமே, இதனை பலரும் விமர்சனம் செய்தாலும் நான் வணங்கும் தெய்வம் ரஜினிகாந்த் என்று அவரது குடும்பத்தினர் பெருமிதம் கொள்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















