மேலும் அறிய
அறுவடை துவங்கியாச்சு ; அரசு கொள்முதல் நிலையங்களை விரைவில் துவங்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
உசிலம்பட்டி அருகே நெல் அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில் - அரசு கொள்முதல் நிலையங்களை விரைவில் துவங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறுவடை
வைகை அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் திறக்கப்பட்ட நீரின் காரணமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செல்லம்பட்டி, கொடிக்குளம், முதலைக்குளம், விக்கிரமங்கலம், நாட்டாமங்கலம், வின்னகுடி, கருமாத்தூர், முண்டுவேலன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் நெல் நடவு செய்திருந்தனர்.
#Madurai | உசிலம்பட்டி அருகே நெல் அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில் - அரசு கொள்முதல் நிலையங்களை விரைவில் துவங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
— arunchinna (@arunreporter92) January 7, 2023
Further reports to follow - @abpnadu @SRajaJourno | @LPRABHAKARANPR3 | @usilaigeetha | @Vignesh_twitz #மதுரை ..... pic.twitter.com/OC7N7gI82u
இந்த நெற்பயிர்கள் தற்போது நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் வின்னகுடி, நாட்டார்பட்டி, கொடிக்குளம், முன்டுவேலன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி துவங்கியுள்ளது.

அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்களை தொட்டத்தின் அருகிலேயே சிறிய அளவில் பாதுகாத்து வருவதாகவும், அரசு விரைவில் கொள்முதல் நிலையங்களை அமைத்து கொடுத்தால் நெல்மணிகளை அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து தை திருநாளை கொண்டாட வசதியாக இருக்கும் எனவும், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விரைவில் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
க்ரைம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை தீயிட்டு கொளுத்திய காதலன் - இளம்பெண் உயிரிழப்பு
மேலும் செய்திகள் படிக்க - Rasipalan Today Jan 7: தனுசுக்கு மாற்றம்...துலாமுக்கு கனிவு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவை தான்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
வேலைவாய்ப்பு




















