Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
ஒரு புகைப்படத்தில் அமெரிக்க அதிபராக வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு டொனால்ட் ட்ரம்ப் பல பெண்களுடன் இருக்கும் காட்சி உள்ளது. அந்த பெண்களின் முகங்கள் மறைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜனநாயக கட்சியானது தற்கொலை செய்துக் கொண்ட பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்புடைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் பின்னணி
அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதார பின்னணி கொண்டவராக அறியப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஒரு பாலியல் குற்றவாளி ஆவார். பள்ளியில் ஆசிரியராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், வங்கி மற்றும் நிதித் துறையில் நுழைந்து சமூகத்தில் மிகப்பெரிய இடத்திற்கு சென்றார். அவர் 14 வயதுக்குட்பட்ட 36 சிறுமிகளை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக கண்டறியப்பட்டார்.
போலீசில் பிடிபட்டபோது உண்மையை ஒப்புக்கொண்டார். ஆனால் ஜாமினில் வெளியான அவர் அதன்பிறகு 2019ம் ஆண்டு மீண்டும் பாலியல் ரீதியாக சிறுமிகளை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். ஆனால் அதே ஆண்டில் ஆகஸ்ட் 10ம் தேதி சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடங்கி சமூகத்தில் பல்வேறு மட்ட பிரபலங்களுடன் நெருங்கி பழகியவர்.
ஆவணங்களை வெளியிட்ட ஜனநாயக கட்சி
இந்த நிலையில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களை வெளியிட வேண்டும் என ஜனநாயக கட்சி தொடர்ச்சியாக அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு அழுத்தம் கொடுத்தது. முதலில் அவர் மறுத்தார். ஆனால் தான் சார்ந்த குடியரசு கட்சியினரும் வலியுறுத்தியதால் ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் எஸ்டேட்டில் இருந்து பெறப்பட்ட புகைப்படங்களை இரண்டாவது முறையாக ஜனநாயக கட்சி வெளியிட்டுள்ளது.
அதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், மைக்ரோசாஃப் நிறுவனர் பில் கேட்ஸ், டிரம்பின் நீண்ட கால நண்பர் ஸ்டீவ் பானன், திரைப்படத் தயாரிப்பாளர் வூடி ஆலன் ஆகியோருடன் ஜெஃப்ரி எப்ஸ்டீன் உள்ளார்.ஆனால் இந்த பிரபலங்கள் யாரும் சட்டவிரோதமாக நடந்து கொண்டதாக காட்டப்படவில்லை. இந்த நிகழ்வு எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரமும் வெளியிடப்படவில்லை. அதில் ஒரு கருப்பு வெள்ளை புகைப்படத்தில் அமெரிக்க அதிபராக வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு டொனால்ட் ட்ரம்ப் பல பெண்களுடன் இருக்கும் காட்சி உள்ளது. அந்த பெண்களின் முகங்கள் மறைக்கப்பட்டுள்ளது.
டிரம்பும் எப்ஸ்டீனும் பல வருடங்களாக நண்பர்களாக இருந்த நிலையில் அவர் 2008ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். ஆனால் 2004ம் ஆண்டிலேயே தங்கள் தொடர்பு முறிந்ததாக ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். எனவே அவர் செய்த குற்றங்களில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் தெரிவித்திருந்தார். புதிதாக வெளியிடப்பட்ட 19 புகைப்படங்களில் மூன்றில் டிரம்ப் இருக்கிறார். அதில் ஒன்றில் சிவப்பு நிற பாக்கெட்டுகளில் அவரது புகைப்படத்துடன் மிகப்பெரியது என எழுதப்பட்ட ஆணுறை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





















