மேலும் அறிய
Advertisement
மீண்டும் மாரிதாஸ் கைது... திண்டுக்கல் மாணவி இறப்பு... - தென் மண்டலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
’’மதுரையில் இன்று நடக்கும் குறைதீர் கூட்டத்தில் டிஜிபி சைலேந்திரபாபுவை சந்திக்க 50க்கும் மேற்பட்ட போலீஸார் கொடுத்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் காவலர்கள் வேதனை'’
1. திருச்செந்தூர் பாலக்காடு இடையே முன்பதிவில்லாத ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.
2. நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் யூடியூபர் மாரிதாஸ் மீது 4 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ள நிலையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3. சிவகங்கை பேருந்து நிலையம் அருகே பைக் பழுதுநீக்கும் கடை நடத்தி வந்தவர் விஜிபாண்டி (40). இவர் 5 நாட்களுக்கு முன்பு காணாமல்போனார். இந்நிலையில் நேற்று கடை அருகே கழிவுநீர் கால்வாயில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
4. மதுரையில் இன்று நடக்கும் குறைதீர் கூட்டத்தில் டிஜிபி சைலேந்திரபாபுவை சந்திக்க 50க்கும் மேற்பட்ட போலீஸார் கொடுத்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் காவலர்கள் வேதனை
5. சிவகங்கை காளையார்கோவிலில் சொர்ணகாளீஸ்வரர்மாவட்டம், உள்ள கோயில் தெப்பக்குளம் 16 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது.
6.ராமேஸ்வரம் - அஜ்மீர் ஹம்சபார் ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.
7. இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கோவில்களில் வெளிப்படைத் தன்மையுடன் தணிக்கை செய்யக்கோரிய வழக்கை ஜனவரி 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
8. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி பாச்சலூாரில் ஐந்தாம் வகுப்பு மாணவி பிரித்திகா, மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் எரித்துக் கொல்லப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.
9. மதுரை எஸ்.எஸ்.காலனியில் பறிமுதல் செய்யப் பட்ட புகையிலை பொருட் களை 'சீல்' வைக்கப்பட்ட அறையில் இருந்து திருடியவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.
10. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும் 5 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75609 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 6 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 74356-ஆக அதிகரித்துள்ளது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion