![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Madurai Power Shutdown (25.09.2024): மதுரை மக்களே அலெர்ட்... நாளை எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?
மின் நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு மின் வாரியம் சார்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பை தெரிந்து கொள்ளவும்.
![Madurai Power Shutdown (25.09.2024): மதுரை மக்களே அலெர்ட்... நாளை எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? Madurai Power Shutdown (25.09.2024) Alert people of Madurai Do you know where there will be power shutdown tomorrow Madurai Power Shutdown (25.09.2024): மதுரை மக்களே அலெர்ட்... நாளை எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/24/7827a4a770425790834284f268c4cc151727156874435184_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Madurai Rural Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( 25.09.2024 ) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின் பாதையில் பராமரிப்பு பணிகள்
தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று மின் வாரியம் மூலம் தகவல் அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும்.
தமிழ்நாடு மின் வாரிய மதுரை கிழக்கு செயற்பொறியாளர் செய்திக் குறிப்பு
இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் மின் நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு மின் வாரியம் சார்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்.
அழகர்கோவில் பகுதி
பொய்கைக்கரைப்பட்டி, நாயக்கன்பட்டி, அழகர்கோவில், கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, பூண்டி, தூயநேரி, மாத்துார், வெள்ளியங்குன்றம், புதுார், கடவூர், தொண்டமான்பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாந்துார்பட்டி, தொப்பலாம்பட்டி, கொடிமங்கலம், கருவனுார், தேத்தாம்பட்டி, மந்திகுளம்.
விமானநிலையம் பகுதி
வலையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குருணி, நல்லுார், குசவன்குண்டு, மண்டேலாநகர், சின்னஉடைப்பு, வலையபட்டி, ஓ.ஆலங்குளம், கொம்பாடி.
- Madurai: கிளி ஜோதிடர்களுக்கு மாற்று தொழில் செய்ய அரசு மூலம் கடனுதவி வழங்க கோரிக்கை !
அதே போல் நாளை மறுநாள் மதுரையில் மின் தடை ஏற்படும் பகுதிகள்
26.09.2024 (வியாழக்கிழமை) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 110/11 கி.வோ ஆனையூர் துணைமின்நிலையத்தில் உயரழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள விருப்பதால் அன்றையதினம் கீழ்கண்ட பகுதியில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதனை மதுரை மேற்கு பெருநகர செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்.
Madurai Power Shutdown (26.09.2024): பாலமேடு மெயின் ரோடு, சொக்கலிங்க நகர் 1வது தெரு முதல் 7வது தெரு வரை, பெரியார் நகர், அசோக் நகர், ரயிலார் நகர், ஹவுசிங் போர்டு, சிலையனேரி, புது விளாங்குடி கூடல் நகர், ஆர்.எம்.எஸ் காலனி , சொக்கநாதபுரம் ராஜ்நகர், பாத்திமாகல்லூரி, பாத்திமாகல்லூரி எதிர்புறம், பழைய விளாங்குடி, சக்தி நகர், துளசி வீதி திண்டுக்கல் மெயின் ரோடு, விஸ்தார குடியிருப்பு, பரவை சந்தை, தினமணி நகர், கரிசல்குளம், அகில இந்திய வானொலி நிலையம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாகுடி பிரிவு, லெட்சுமிபுரம்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Encounter Death: இந்தியா முழுவதும் 7 ஆண்டுகளில் இத்தனை என்கவுன்டர்களா? மாநில வாரியாக லிஸ்ட் இதோ!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TN Rains: சென்னையில் இரவோடு இரவாக வெளுத்து வாங்கிய மழை - எந்த ஏரியாவில் எத்தனை செ.மீட்டர்?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)