Encounter Death: இந்தியா முழுவதும் 7 ஆண்டுகளில் இத்தனை என்கவுன்டர்களா? மாநில வாரியாக லிஸ்ட் இதோ!
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து என்கவுன்டரில் ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் நடைபெற்ற ரவுடிகளின் என்கவுன்டர் பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவராக பொறுப்பு வகித்த ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு தமிழ்நாட்டில் ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் ரவுடி திருவேங்கடம், காக்காதோப்பு பாலாஜி அடுத்தடுத்து என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் நேற்று பிரபல ரவுடி சீசிங்ராஜா சுட்டுக்கொல்லப்பட்டார்.
என்கவுன்டர் பட்டியல்:
இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை எத்தனை என்கவுன்டர்கள் நடைபெற்றது என்பதை மாநில வாரியாக கீழே விரிவாக காணலாம்.
- ஆந்திர பிரதேசம் - 11
- அருணாச்சல பிரதேசம் - 14
- அசாம் - 79
- பீகார் - 25
- சத்தீஷ்கர் - 259
- குஜராத் - 2
- ஹரியானா - 16
- இமாச்சல பிரதேசம் - 1
- ஜார்க்கண்ட் - 52
- கர்நாடகா - 6
- கேரளா - 9
- மத்திய பிரதேசம் - 8
- மகாராஷ்ட்ரா- 33
- மணிப்பூர் – 12
- மேகலாயா - 18
- நாகலாந்து – 1
- ஒடிசா – 40
- பஞ்சாப் - 8
- ராஜஸ்தான் – 12
- சிக்கிம் - 1
- தமிழ்நாடு – 11
- தெலங்கானா – 8
- திரிபுரா - 3
- உத்தரபிரதேசம் – 110
- உத்தரகாண்ட் – 1
- மேற்கு வங்காளம் – 21
- அந்தமான் நிக்கோபர் – 1
- டெல்லி – 9
- ஜம்மு காஷ்மீர் -45
மேலே குறிப்பிட்ட 7 ஆண்டுகளில் 700க்கும் மேற்பட்டோர் இந்தியா முழுவதும் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளனர்.
சத்தீஷ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நக்சலைட்கள் மற்றும் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால் அங்கு என்கவுன்டர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதால் அங்கும் என்கவுன்டர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.
தமிழ்நாட்டை கதிகலங்க வைத்த என்கவுன்டர்களில் சீவலப்பேரி பாண்டி, அயோத்தியாகுப்பம் வீரமணி, வீரப்பன் ஆகியோர் என்கவுன்டர் மிக மிக முக்கியமானது ஆகும்.