வைகை அணையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்; மீன் பிடிக்கும் உரிமைத்தை ரத்து செய்யுங்கள்
வைகை அணையில் இறைச்சிக் கழிவுகளை கொட்டி வரும் மீன் பிடிக்கும் உரிமம் பெற்றவர்களின் உரிமத்தை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்.
வைகை அணையில் இறைச்சிக் கழிவுகளை கொட்டி வரும் மீன் பிடிக்கும் உரிமம் பெற்றவர்களின் உரிமத்தை ரத்து செய்ய கோரி சிஐடியு தொழிற்சங்கம் மற்றும் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியினர் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேற்கு தொடர்சி மலைகள் அமைந்துள்ள மாவட்டமான தேனி மாவட்டத்தில் வைகை அணை, மஞ்சலாறு அணை, சண்முகா நதி அணை, சோத்துப்பாறை அணை, முல்லை பெரியாறு அணை ஆகியவை முக்கிய நீராதாரங்களாக அமைந்துள்ளன. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி செல்லும் வழியில் வைகை ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை வைகை அணையின் நீரை கொண்டு மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் விவசாயம் நடைபெறுகிறது. தேனி வைகை அணை, ஐந்து மக்களின் குடி நீர் ஆதாரமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வருடமும் கோடைகாலங்களில் இந்த அணையில் நீர் வரத்து குறைந்து இருப்பதாலும், நீர் மட்டம் குறைந்து இருப்பதால் அணையிலிருந்து திறக்கப்படும் குடிநீரின் அளவும் குறைந்திருக்கும். இந்த நிலையில் கோடை காலங்களில் இந்த அணையில் உள்ள மீன்களை பிடித்து விற்பனை செய்வதற்கு பொதுப்பணித்துறையினர் சார்பில் டெண்டர் விடப்படும். இந்த நிலையில் தற்போது இந்த அணையில் தனிநபர் ஒருவருக்கு மீன் பிடிக்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
PM Modi: "இனி உங்களிடம் நான் தமிழிலே பேசப்போகிறேன்" பிரதமர் மோடி கொடுத்த சர்ப்ரைஸ்!
மீன் வளர்ப்பிற்காக இறைச்சி கழிவுகளை மீன் பிடிக்கும் குத்தகைதாரர்கள் அணையில் கொட்டி வருதாகவும், இதனால் குடிநீர் மாசு அடைந்து வருவதாகவும் எனவே மீன்படி உரிமத்தை ரத்து செய்ய கோரி சிஐடியு தொழிற்சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வைகை அணை மீனவர்கள் விவசாயிகள் என ஏராளமானோர் பங்கேற்று, தனியார் மீன் பிடி உரிமத்தை ரத்து செய்ய கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்களது கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.