மேலும் அறிய
பாதுகாப்பு விதிகளை புறக்கணித்து கட்டப்பட்டுள்ள பாம்பன்பாலம் ; பதில் சொல்ல வேண்டும் - மதுரை எம்.பி காட்டம் !
ரயில்வே அமைச்சகம் எப்படி இதற்கு அனுமதியளித்தது என்பதை அமைச்சர் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் - மதுரை எம்.பி

பாம்பனில் ஆய்வு
பாதுகாப்பு விதிகளை புறக்கணித்து கட்டப்பட்டுள்ள பாம்பன்பாலம். விதிகளை புறக்கணித்த திட்டத்திற்கு எப்படி ஒப்புதல் கொடுக்கப்பட்டது? இரயில்வே அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என மதுரை எம்.பி தெரிவித்துள்ளார்.
மோசடியை இரயில்வே பாதுகாப்பு ஆணையரே கடுமையாக விமர்சித்துள்ளார்
மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளிட்டுள்ள செய்திக் குறிப்பில்...,” பாம்பன் பாலம் 1914 இல் கட்டப்பட்டது. அது அன்றையக் காலத்தில் ஒரு பொறியியல் அதிசயமாகும். அதற்கு பதிலாக புதிய பாலம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமானத்தில் நடந்துள்ள மோசடியை இரயில்வே பாதுகாப்பு ஆணையரே கடுமையாக விமர்சித்துள்ளார். உதாரணமாக தூக்குப்பாலப் பகுதி ரயில்வேயில் ஆராய்ச்சி வடிவம் மற்றும் தர நிர்ணய அமைப்பின் (RDSO) எந்தவிதமான ஒப்புதலும் இல்லாமல் வேறு வடிவமைப்பு விதிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாம்பன் பாலம்.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 28, 2024
இரயில்வே துறையின் ஆராய்ச்சி, வடிவம் மற்றும் தரநிர்ணய அமைப்பான RDSO வின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பின்னணி என்ன?
இத்திட்டத்தில் நிகழ்ந்துள்ள மோசடி குறித்து ரயில்வே அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் . 1/2… pic.twitter.com/2LfE4D63K1
கடமையை கைவிட்டுள்ளது
ரயில்வே வாரியத்தின் ஆதரவோடு ஆர்.டி.எஸ்.ஓ தன் கடமையை கைவிட்டுள்ளது வேதனையாகும், என்று அவர் சுட்டிக் காட்டி உள்ளார். இப்படிப்பட்ட முக்கியமான பாலம் கட்ட தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆராய்ச்சி, வடிவம் மற்றும் தரநிர்ணய அமைப்பை (RDSO) இதில் ஈடுபடுத்த வேண்டாம் என்று ரயில்வே வாரியம் முடிவெடுத்தக் காரணத்தால் தொழில்நுட்பக் குழுவை அமைக்க வில்லை. ரயில்வே வாரியம் தனது சொந்த நடைமுறை விதிகளை மீறுவது மிகவும் ஆபத்தானது துரதிஷ்டமானது என்று ஆணையர் கண்டித்துள்ளார்.
இதுவும் மிகவும் மோசமானது
அது மட்டுமல்ல பாலத்திற்கான இரும்பு படிமங்கள் கூட ஆர் டி எஸ் ஓ வை கலந்தாலோசிக்காமல் கட்டப்பட்டுள்ளது. இதுவும் மிகவும் மோசமானது. எல்லாம் முடிந்த பிறகு தெற்கு ரயில்வே தலைமை பொறியியல் அதிகாரியின் ஒப்புதலை ஆணையம் சுட்டிக் காட்டிய பின் 18. 10. 24 இல் பெற்றுள்ளனர். இந்தியாவின் பெருமைமிகு அமைப்பான இந்திய ரயில்வே வாரியம் தமிழகத்தின் பாரம்பரியமிக்க வழித்தடத்தில் பாம்பன் பாலத்தை பாதுகாப்பு விதிகளை புறக்கணித்துக் கட்டியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். பாம்பன் பாலம் கடல்நீரின் ஈரப்பதத்திற்கும், காற்றின் தாக்கத்திற்கும், ரயிலின் வேகத்திற்கும் ஈடுகொடுக்கும் வகையில் கட்டப்பட வேண்டிய கட்டுமான தொழில்நுட்பமாகும். இதை அலட்சியப்படுத்துவது அந்த வழித்தடத்தில் தினந்தோறும் பயணிக்க உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை அலட்சியப்படுத்துவதாகும். ரயில்வே அமைச்சகம் எப்படி இதற்கு அனுமதியளித்தது என்பதை அமைச்சர் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
கிரிக்கெட்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion