மைக்கில் பீப் சவுண்ட், உங்க ஏரியாவிற்கு வரும்போது இத பண்ணுங்க.. அமைதியான கள ஆய்வுக் கூட்டம் களேபரம் ஆனது எப்படி?
கள ஆய்வுக் கூட்டத்தை களேபர கூட்டமாக மாற்றிவிட்டார். ராஜன் செல்லப்பா எதுவும் செய்யமுடியாத நிலையில் உள்ளார். எனவே அ.தி.மு.க., தலைமை களம் இதற்கு முடிவு கட்ட வேண்டும் என தொண்டர்கள் கேட்டுக் கொண்டனர்.
அ.தி.மு.க., கள ஆய்வுக் கூட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம்
அ.தி.மு.க.,வின் கிளை, வார்டு, வட்டகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள் செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்ய, கள ஆய்வுக் குழு ஒன்றை அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நியமித்தார். இந்தக் குழுவில் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி வேலுமணி, பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செ.செம்மலை, வரகூர் அருணாச்சலம், பா.வளர்மதி உள்ளிட்ட 10 பேர் கொண்ட நபர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர். அ.தி.மு.க.வில் அமைப்புரீதியாக உள்ள 82 மாவட்டங்களா பிரித்து இந்த கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க., நிர்வாகிகள் முன் ஏற்படும் பிரச்னை
இந்தநிலையில் தான் நெல்லை, கும்பகோணம் கள ஆய்வுக் கூட்டத்தில் களேபரம் வெடித்தது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலு மணி தலையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் நடைபெற்ற பிரச்னையால் பரபரப்பு ஏற்பட்டது. அதே போல் மதுரையில் அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டு. அன்று மாலையே அதிமுக மதுரை புறநகர் சார்பாக திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்திலும் தள்ளு, முள்ளும் மற்றும் காது கூசும் அளவிற்கு மைக்கில் பீப் சவுண்டுகள் வாசிக்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருப்பரங்குன்றம் கள ஆய்வுக் கூட்டத்தில் என்ன நடந்தது
மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் செம்மலை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் கள ஆய்வுக் கூட்டம் கடந்த 25-ம் தேதி மாலை நடைபெற்றது. இதில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ராஜன் செல்லப்பாவும் தலைமை தாங்கினர். மற்ற இடங்களில் நடைபெற்ற தள்ளு, முள்ளு களேபரம் குறித்து பேசிய ராஜன் செல்லப்பா...,” அ.தி.மு.க., தொண்டர்கள் பிரிந்து இருந்தாளும் தேர்தல் சமயம், போராட்டங்கள் நடைபெறும் போது இணைந்து கொள்வோம் என்பது போல் தொண்டர்களை உற்சாகப்படுத்தி பேசினார். கள ஆய்வுக் கூட்டமும் அங்கு அமைதியான முறையில் நிறைவடைய இருந்தது. இந்த கூட்டத்தில் மதுரை கிழக்கு, மேலூர், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதனால் கூட்டம் முடிந்த பின் மேலூர் ஒன்றிய கழக செயலாளர் பொன் ராஜேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளார்கள், முன்னாள் அமைச்சர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள முயன்றனர். ஆனால், அதனை தடுக்க முயன்ற வழக்கறிஞர் ரமேஷ் கடுமையான வார்த்தைகளில் பேசினார். உங்க ஏரியாவிற்கு வரும்போது புகைப்படம் எடுத்துக் கொள் என்பது போல பேசினார். இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் உருவாகும் சூழலில் தள்ளு, முள்ளானது. மைக்கில் பயங்கர கெட்ட வார்த்தையில் பேசிய வழக்கறிஞர் ரமேஷ் மீது கடுப்பான மேலூர் பகுதி தொண்டர்கள் அடிக்க பாய்ந்தனர். அவர் மீது ”கை” வைக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. பின்னர் ஒரு வழியாக பிரச்னை, வலுப்பெறாமல் கூட்டம் விலக்கப்பட்டது. அமைதியாக கள ஆய்வுக் கூட்டம் நிறைவடையும் சூழலில் வழக்கறிஞர் ரமேஷ் இப்படி செஞ்சுட்டாரே என நொந்து கொண்டனர் தொண்டர்கள்.
செல்லப்பாவிற்கும், தொல்லை கொடுக்கும் நபர் யார்?
இதுகுறித்து கூட்டத்திற்கு வந்திருந்தவர்களிடம் பேசினோம்...,” வழக்கறிஞர் ரமேஷ் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளராக உள்ளார். எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா மேயராக இருந்த சமயம் முதல் அவருக்கு பின்னால் இருந்து வருகிறார். இதனால் வக்கில் ரமேஷுக்கு செல்லப்பா குறித்து, (அ முதல் ஃ) வரை தெரியும் என்பதால் ராஜன் செல்லப்பா, அவரை இடது கையாக வைத்துள்ளார். தனிப்பட்ட வகையில் ரமேஷை பிடிக்காது என்றாலும் வேறு வழியில்லாமல் ஆதரித்து வருகிறது. ராஜன் செல்லப்பாவிற்கு எதிராக பல்வேறு வேலைகளையும் மறைமுகமாக வக்கில் ரமேஷ் தொடர்ந்து செய்து வருகிறார். கட்சியில் போஸ்டிங் போட்டால் கூட டபில் எண்ட்ரி முறையில் தனது ஆதரவாளர்களுக்கு இரண்டு போஸ்டிங் வரும்படி செய்தார். இப்போது கள ஆய்வுக் கூட்டத்தை களேபர கூட்டமாக மாற்றிவிட்டார். ராஜன் செல்லப்பா எதுவும் செய்யமுடியாத நிலையில் உள்ளார். எனவே அ.தி.மு.க., தலைமை களம் இதற்கு முடிவு கட்ட வேண்டும்” என கேட்டுக் கொண்டனர்.