திருமங்கலம் கோட்டாட்சியரை கண்டித்து 100 பெண்கள் அடையாளம் ஆவணங்களை ஒப்படைத்து போராட்டம்
திருமங்கலம் கோட்டாட்சியர் சாந்தியை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் அடையாளம் ஆவணங்களை ஒப்படைத்து போராட்டம்.
மதுரை பெருங்குடி அம்பேத்கார் நகரில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெருங்குடி அம்பேத்கார் நகரில் உள்ள கருப்பண்ணசாமி மற்றும் ஸ்ரீ தங்க காளியம்மன் கோவிலை கட்டி வழிபட்டு வருவதாகவும்,
மதுரையில் திருமங்கலம் கோட்டாச்சியர் சாந்தியை கண்டித்து 100 க்கும் மேற்பட்ட பெண்கள் அடையாளம் ஆவணங்களை ஒப்படைத்து போராட்டம் நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
— arunchinna (@arunreporter92) August 8, 2023
Further reports to follow @abpnadu#madurai | @LPRABHAKARANPR3@ClubStarwi4493 | @abpnadu . pic.twitter.com/qYc3lfz1lK
கோவில் இருக்குமிடம் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், பெருமாள்பாபு என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் கோவிலை கட்டி இருப்பதாகவும், கோவிலை அகற்ற வேண்டும் என கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திருமங்கலம் கோட்டாட்சியர் சாந்தி தலைமையில் ஆகஸ்ட் 1 ல் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் போது கோட்டாட்சியர் சாந்தி பெண்களை தரக்குறைவாக பேசி அவமானப்பசுத்தியதாக 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
Gyanvapi Case: ஆய்வுக்கு யெஸ்..அகழ்வாராய்ச்சிக்கு நோ..ஞானவாபி மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு
கோட்டாட்சியர் சாந்தி மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், ஒரு தலைபட்சமாக நடந்து கொண்ட கோட்டாட்சியர் சாந்தியை கண்டித்து ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை என தங்களுடைய அடையாள ஆவணங்களை குறை தீர்ப்பு முகாம் அலுவலரிடம் ஒப்படைத்தனர், அதிகாரிகள் பேசி பார்த்தும் அடையாள ஆவணங்களை வாங்க மறுத்து விட்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்