மேலும் அறிய
10 ஆயிரம் பேருக்கு மணக்க, மணக்க மட்டன் பிரியாணி; மதுரையே மிரண்ட பிரம்மாண்ட விருந்து
”வரவுள்ள தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்று கூறி உள்ளார். அதில் முதல் தொகுதியாக மேலூர் இருக்க வேண்டும்”
![10 ஆயிரம் பேருக்கு மணக்க, மணக்க மட்டன் பிரியாணி; மதுரையே மிரண்ட பிரம்மாண்ட விருந்து Madurai melur Mutton Biryani for 10 thousand people dmk held at Melur Mantha Thital 10 ஆயிரம் பேருக்கு மணக்க, மணக்க மட்டன் பிரியாணி; மதுரையே மிரண்ட பிரம்மாண்ட விருந்து](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/26/d6d9ccdddcf0c6bde7c24fabd026124f1732608688566184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரியாணி பரிமாறிய அமைச்சர்
Source : whats app
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மட்டன் பிரியாணி, சிக்கன் லெக் பீஸ், தயிர் சாதம் உள்ளிட்ட உணவு மெனுக்களுடன் வாழை இலை விருந்து பரிமாறப்பட்டது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
திமுக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க., சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டது. இவ்வாறு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில். இந்நிலையில் மேலூரில் பிறந்தநாளை முன்னிட்டு பத்தாயிரம் பேருக்கு பிரியாணி வழங்கும் பிரம்மாண்ட விழா நடத்தினர். இந்த விழாவில் ”திமுக கோட்டை ஆவதற்கு மகளிர் தான் முன்னோடி” என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி புகழாரம் சூடியுள்ளார்.
ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு பிறந்தநாள் விழா
மதுரை மாவட்டம் மேலூரில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு, மேலூர் காஞ்சிவனம் மந்தை திடலில் மேலூர் நகர் திமுக 19 வார்டு கவுன்சிலர் ரிஷி ஏற்பாட்டின் பேரில் 10 ஆயிரம் பேருக்கு அசைவ அன்னதான வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மட்டன் பிரியாணி, சிக்கன் லெக் பீஸ், தயிர் சாதம் உள்ளிட்ட உணவு மெனுக்களுடன் வாழை இலை விருந்து பரிமாறப்பட்டது. இதில் மேலூர் தொகுதி அளவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று அன்னதான உணவு அருந்தினர்.
இனி எந்த காலமாக இருந்தாலும் தி.மு.க தான்
இதனை துவக்கி வைக்க தமிழக வணிகவரித் துறை அமைச்சரும் மதுரை தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளருமான மூர்த்தி பங்கேற்று அன்னதானத்தை துவக்கி வைத்தார். முன்னதாக மேடையில் அவர் பேசுகையில், முதல்வரும் துணை முதல்வரும் தேர்தல் பணியை ஆரம்பிக்க துவங்கி விட்டனர். மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியையும் திமுக வசம் வெற்றி பெறுவது தான் தனது லட்சியம் என தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், மகளிர்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, பேருந்து இலவச பயணம், பெண்கள் பெயரில் இலவச பட்டா கொடுத்தது என திமுக அரசு கொடுத்தது எனவும், இனி எந்த காலமாக இருந்தாலும் தி.மு.க., கோட்டையாவதற்கு மகளிர் ஆகிய நீங்கள் தான் முன்னோடி அதற்கு நாங்களும் என்றென்றும் உறுதுணையாக இருப்போம். வரவுள்ள தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்று கூறி உள்ளார். அதில் முதல் தொகுதியாக மேலூர் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Mirchi Shiva : எனக்கு போட்டியே கிடையாது...சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கான போட்டி பற்றி மிர்ச்சி சிவா கொடுத்த செம ரிப்ளை
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion