மேலும் அறிய
Advertisement
FAST TAGல் பணம் இல்லை திருப்பி அனுப்பப்பட்ட அரசுப் பேருந்துகள்; கப்பலூர் டோல்கேட்டில் பரபரப்பு
கப்பலூர் சுங்கச்சாவடி மிகவும் அத்துமீறி செயல்படுவதாக பேருந்து பயணிகள் குற்றச்சாட்டினர். இதுபோன்ற சம்பவங்கள் இங்கு அடிக்கடி நடக்கிறது என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
மதுரை கப்பலூர் டோல்கேட்டை கடக்கும் போது, FAST TAG ல் பணம் இல்லை என அரசு பேருந்துகளை திருப்பி அனுப்பிய சுங்கச்சாவடி ஊழியர்களால் பயணிகள் அவதியடைந்தனர்.
தொடர் பஞ்சாயத்தில் கப்பலூர் டோல்கேட்
மதுரை திருமங்கலம் நகராட்சி எல்லைக்குட்பட்ட கப்பலூர் பகுதியில் அமைந்துள்ளது கப்பலூர் டோல்கேட். விதிமுறைக்கு புறம்பாக அமைக்கப்பட்டதோடு, மட்டுமல்லாமல் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டுமென நிர்பந்தம் செய்வதாக, கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி திருமங்கலம் உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடந்த ஜூலை 10-ஆம் தேதி உள்ளூர் வாகனங்களுக்கு 50% கட்டணம் வசூல் செய்வதாக அறிவித்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு உள்ளூர் வாகன ஓட்டிகள் ஒன்பது மணி நேரம் போராட்டம் நடத்தினர். கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்ற கோரி 15க்கும் மேற்பட்ட ஊராட்சி கிராம சபை கூட்டத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உள்ளூர் வாகனம் செல்லலாம்
ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைமுறைப்படி உள்ளூர் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் செல்லலாம் எனவும் சுங்கச்சாவடியில் இருந்து 7 km தொலைவில் உள்ள வாகனங்கள் ஆதர் அட்டையை காண்பித்து கட்டணம் செலுத்தாமல் செல்லலாம் எனவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். மேலும் எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். அதற்கு எந்த வித உறுதியும் கொடுக்காமல் அதிகாரிகள் கூட்டரங்கில் இருந்து வெளியே சென்றார்.
மீண்டும் அனுமதி மறுப்பு
இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் உள்ளூர் வாகன ஓட்டி கப்பலூர் சுங்கச்சாவடியை கடந்து செல்ல முற்பட்டபோது கட்டணம் கட்டிவிட்டு செல்லுமாறு கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் மீண்டும் தெரிவித்தது. இதனால் உள்ளூர் வாகன ஓட்டிக்கும், கப்பலூர் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பில் முடிந்தது.
FAST TAG-ல் பணம் இல்லை என அரசு பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்து
இந்நிலையில் மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் மதுரையில் இருந்து திருநெல்வேலி மார்க்கமாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த சிறப்பு பேருந்துகளுக்கு கட்டணம் FAST TAG-ல் இணைக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. எனினும் சுங்கச்சாவடி ஊழியர்கள் ஸ்கேன் செய்தால் வேலை செய்யவில்லை. பணம் பெறமுடியவில்லை என்ற காரணத்தினால் அரசு பேருந்துகளை, சுங்க சாவடி ஊழியர்களால் திருப்பி அனுப்பட்டது. சுமார் அரை மணி நேரம் கப்பலூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் திருநெல்வேலி மார்க்கமாக வந்த பத்துக்கு மேற்பட்ட பேருந்துகள் திருப்பி அனுப்பி திருமங்கலம் சுற்றி சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் அளவிற்கு வாகனங்கள் பின்புறமாக சென்றது. இதனால் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர். கப்பலூர் சுங்கச்சாவடி மிகவும் அத்துமீறி செயல்படுவதாக பேருந்து பயணிகள் குற்றச்சாட்டினர். இதுபோன்ற சம்பவங்கள் கப்பலூர் சுங்க சாவடியில் அடிக்கடி நடக்கிறது என்று பொதுமக்கள் புகார் வாசித்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Actor Jeeva Car Accident: அதிர்ச்சி... கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.. அவருக்கும், மனைவிக்கும் என்ன ஆனது?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion