மேலும் அறிய
திண்டுக்கல் மீன் சந்தை புதுப்பிப்பு பணிக்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு !
மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறிய நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கையில் போதிய தகுதிகள் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மதுரைக் கிளை
மீன் சந்தையை புதுப்பிக்கவோ அல்லது அங்கு தொடர்ந்து இயக்கவோ தடை விதிக்க வேண்டும், அதற்குப் பதிலாக மக்கள் நடமாட்டம் இல்லாத மாற்று இடத்திற்கு சந்தையை மாற்ற உத்தரவிட வேண்டும். - என கோரிக்கை.
மீன் சந்தையை புதுப்பிக்கும் பணிகள்
திண்டுக்கல் சேர்ந்த ஜீவானந்தம் என்பவர் ஹை கோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு..,"திண்டுக்கல் வார்டு எண் 22, மார்க்கெட் ரோட்டில் உள்ள மீன் சந்தையை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இங்கு இயங்கி வரும் மின் சந்தையால் சுற்றுச்சூழல் பாதிப்பு, சுகாதார சீர்கேடு மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இந்த மீன் சந்தையை புதுப்பிக்கவோ அல்லது அங்கு தொடர்ந்து இயக்கவோ தடை விதிக்க வேண்டும், அதற்குப் பதிலாக மக்கள் நடமாட்டம் இல்லாத மாற்று இடத்திற்கு சந்தையை மாற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார்.
போதிய தகுதிகள் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி
இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதி தாமன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது அந்த மீன் சந்தை பல ஆண்டுகளாக அதே இடத்தில்தான் இயங்கி வருகிறது. தற்போது அங்கு புதுப்பிக்கும் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. எனவே, சுற்றுச்சூழல் காரணங்களைக் காட்டி இந்தப் பணிகளை நிறுத்த முடியாது. சந்தையை முறையாகப் பராமரிப்பதும், கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதும் அதிகாரிகளின் கடமையாகும். மீன் சந்தையை புதுப்பிக்கும்போது, கழிவுப் பொருட்களை குடியிருப்புப் பகுதிகளில் கொட்டக் கூடாது, பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறிய நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கையில் போதிய தகுதிகள் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion




















