மேலும் அறிய

மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!

மதுரையில் இருந்து சிறப்பு ரெயிலை இயக்கிய என்ஜின் டிரைவர், உதவி டிரைவர் மற்றும் ரெயில் கார்டு ஆகியோர் மீது  துறைரீதியாக நடவடிக்கை எடுக்க கோட்ட மேலாளர் நோட்டீஸ் அளித்துள்ளார்.

மதுரை-ராமேஸ்வரம் ஆடி அமாவாசை சிறப்பு ரெயில் கீழ்மதுரை ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்றதாக புகார் - இன்ஜின் டிரைவர்கள். ரெயில்வே கார்டு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் உத்தரவு.

பொதுப்பெட்டிகளை கொண்ட சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.
 
ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக மதுரையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு நேற்று முன்தினம் இரவு முற்றிலும் பொதுப்பெட்டிகளை கொண்ட சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் மதுரையில் இருந்து நள்ளிரவு 11 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.30 மணிக்கு ராமேசுவரம் சென்றடைந்தது. அதே போல, மறுமார்க்கத்தில் மற்றொரு ரெயில் ராமேஸ்வரத்தில் இருந்து இயக்கப்பட்டது. இந்த ரெயில் நேற்று அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு காலை 6 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைந்தது. இந்த ரெயில்கள் கீழ்மதுரை, திருப்புவனம், மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததால் பயணிகள்  ரெயில் நிலையங்களில் ராமேசுவரம் செல்ல காத்திருந்தனர்.
 
சிறப்பு ரெயில் கீழ்மதுரை ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்று விட்டது.
 
  இதற்கிடையே, மதுரையில் இருந்து ராமேஸ்வரம் புறப்பட்ட சிறப்பு ரெயில் கீழ்மதுரை ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்று விட்டது. இதனால் அங்கிருந்த பயணிகள் திகைத்தபடி நின்றனர். இதையடுத்து கீழ்மதுரை ரெயில் நிலையத்தில் பணியில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர் மதுரையில் உள்ள உயரதிகாரிகளிடம் பேசி சிறப்பு ரெயிலுக்கு வாங்கியிருந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட பயணிகளிடம் டிக்கெட்டை திரும்ப பெற்றுக்கொண்டு அதற்கான கட்டணத்தை திரும்ப கொடுத்ததோடு அனைவரையும் ஆட்டோ மூலம் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
 
துறைரீதியாக நடவடிக்கை எடுக்க கோட்ட மேலாளர் நோட்டீஸ் அளித்துள்ளார்.
 
இந்நிலையில் நிறுத்தத்தில் ரயில் நிற்காமல் சென்றதற்கான காரணம் குறித்து மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், மதுரையில் இருந்து செல்லும் ரெயிலுக்கு கீழ்மதுரை, திருப்புவனம் ரெயில் நிலையங்களில் நிறுத்தம் வழங்கப்பட்டு இருந்ததும், மறுமார்க்கத்தில் ராமேசுவரத்தில் இருந்து வரும் ரெயிலுக்கு அந்த நிலையங்களில் நிறுத்தங்கள் வழங்கவில்லை என்பதும் தெரியவந்தது. இதை சரிவர கவனிக்காமல் ரெயிலை இயக்கி, கீழ்மதுரையில் நிறுத்தாமல் சென்றது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து, மதுரையில் இருந்து சிறப்பு ரெயிலை இயக்கிய என்ஜின் டிரைவர், உதவி டிரைவர் மற்றும் ரெயில் கார்டு ஆகியோர் மீது  துறைரீதியாக நடவடிக்கை எடுக்க கோட்ட மேலாளர் நோட்டீஸ் அளித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: சிறையில் இருந்து 6 காவலர்கள் காணொலியில் ஆஜர்!
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: சிறையில் இருந்து 6 காவலர்கள் காணொலியில் ஆஜர்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Embed widget