மேலும் அறிய

TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி

Karur Stampede Government Job Case: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப் பணிக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் என்பது ஒரு துயர சம்பவம் அதில் அரசியல் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய்ள்ளது.

கரூர் அரசு பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி

கடந்த ஆண்டு கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி,  41 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு கடந்த மாதம் முதலமைச்சர் விஜய் அரசுப்பணி வழங்கினார். இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்த வழக்கில், அரசுப்பணிகளை கருணை அடிப்படையில் இப்படி வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பணி நியமன ஆணைகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவிட்டுள்ளது.

இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்:

நீதிபதிகள் பரித்வாலா மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “நிவாரணமாக வேலையை அரசு வழங்க விரும்பினால், அதில் உயர்நீதிமன்றத்திற்கு என்ன பிரச்னை? வேலைவாய்ப்பு பிரச்சினை என குறிப்பிட்டு இந்த விவகாரம் தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றும் வாதிட்டார். எதிர்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநில அரசுக்கு இதுபோன்று வேலைகளை வழங்கும் அதிகாரம் இருக்க முடியாது” என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம் அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பினர் விரிவான பதிலளிக்க உத்தரவிட்டதோடு, பணி நியமனத்தை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடையும் விதிக்கப்பட்டது.

உங்களுக்கு என்னங்க பிரச்னை?

வழக்கு விசாரணையின்போது கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “ஒரு துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் என்ன பிரச்சினை? கூட்ட நெரிசல் ஏற்பட்டது, மக்கள் இறந்தனர். அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்றும், பண இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசு முடிவு செய்தால், அவர்களுக்கு வேலை வழங்கக் கூடாது என்று நீங்கள் எப்படி அவர்களைக் கேள்வி கேட்க முடியும்? அந்தத் துயரச் சம்பவத்தில் குடும்பத்தின் ஒரே உறுப்பினர் இறந்துவிட்டால், அரசு அவரது மகனுக்கோ அல்லது மகளுக்கோ ஏதேனும் வேலை கொடுக்க வேண்டாமா?" என நீதிபதிகள் வலியுறுத்தினார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்தரப்பு வழக்கறிஞர், ”கூட்ட நெரிசலுக்குக் காரணமான கட்சியே தற்போது மாநிலத்தை ஆட்சி செய்வதால், இந்த முடிவில் நலன் முரண்பாடு உள்ளது” என்று குறிப்பிட்டார். அப்போது எதிர்தரப்பு  வழக்கறிஞர் யாருக்காக ஆஜராகிறார் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு நாம் தமிழர் கட்சி சார்பில் என்று பதிலளிக்க, "இங்கே அரசியலைக் கொண்டு வராதீர்கள்," என்று நீதிபதி சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்: CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?

சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?

அரசின் முடிவுக்கு எதிரான வழக்கு கடந்த ஜூலை 27ம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ ஒவ்வொரு அரசுத் துறையிலும் கருணை அடிப்படையில் நியமனம் பெற பலர் காத்திருப்பதாகவும், அவர்களின் தேவைகளைப் புறக்கணித்து, தற்போதைய வழக்கில் அந்தக் குடும்பங்களுக்கு வேலை வழங்குவது பொருத்தமற்றது. அரசியலமைப்பின் 162-வது பிரிவின் கீழ் தனக்குள்ள நிர்வாக அதிகாரங்களைப் பயன்படுத்தி மாநில அரசு உத்தரவுகளைப் பிறப்பித்ததாகக் கூறினாலும், அத்தகைய அதிகாரங்கள் அரசியலமைப்பின் கடுமையான விதிகளுக்கு உட்பட்டுத்தான் பயன்படுத்தப்பட வேண்டும். தற்போதைய வழக்கில் கருணை அடிப்படையிலான நியமனம் அனுமதிக்கப்பட்டால், அது மற்ற பலரும் அத்தகைய வேலைவாய்ப்பைத் தேடுவதற்கு வழிவகுக்கும். எனவே நியமன சட்டப்பிரிவுகள் 14 மற்றும் 16-ஐ மீறுவதை குறிப்பிட்டு, பணி நியமனங்களை ரத்து செய்கிறோம்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay: புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஆவடிக்கு 24 மணி நேரமும் சேவை - புதிய அறிவிப்புகளால் அதிரவிட்ட விஜய்
புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஆவடிக்கு 24 மணி நேரமும் சேவை - புதிய அறிவிப்புகளால் அதிரவிட்ட விஜய்
விஜய் தான் அடுத்த PM.! அப்போ ராகுல் காந்தி.? ஜோதிடம் கணித்த கனிமொழி MLA- என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
விஜய் தான் அடுத்த PM.! அப்போ ராகுல் காந்தி.? ஜோதிடம் கணித்த கனிமொழி MLA- என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
அறிவாலயத்தில் என்ன நடக்கிறது? 'நால்வர் அணி' போட்ட சீக்ரெட் திட்டம்... வெளியான முக்கிய பட்டியல்!
அறிவாலயத்தில் என்ன நடக்கிறது? 'நால்வர் அணி' போட்ட சீக்ரெட் திட்டம்... வெளியான முக்கிய பட்டியல்!
Aadhav arjuna:
Aadhav arjuna: "ஆதவ் அர்ஜுனா பேசும்போது ஆணவம் எட்டிப்பாக்குது.." தமிழிசை சவுந்தர்ராஜன் குற்றச்சாட்டு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வழக்குகளால் திண்டாடிய ஆசிரியர்கள், விவசாயிகள்.. ஒரே அறிவிப்பில் அனைத்தையும் தீர்த்த விஜய்!
வழக்குகளால் திண்டாடிய ஆசிரியர்கள், விவசாயிகள்.. ஒரே அறிவிப்பில் அனைத்தையும் தீர்த்த விஜய்!
CM Vijay: புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஆவடிக்கு 24 மணி நேரமும் சேவை - புதிய அறிவிப்புகளால் அதிரவிட்ட விஜய்
புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஆவடிக்கு 24 மணி நேரமும் சேவை - புதிய அறிவிப்புகளால் அதிரவிட்ட விஜய்
விஜய் தான் அடுத்த PM.! அப்போ ராகுல் காந்தி.? ஜோதிடம் கணித்த கனிமொழி MLA- என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
விஜய் தான் அடுத்த PM.! அப்போ ராகுல் காந்தி.? ஜோதிடம் கணித்த கனிமொழி MLA- என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
Mitsubishi Pajero: கரடுமுரடாக கம்பேக் கொடுத்த மிட்சுபிஷி 7 சீட்டர் - பஜேரோ டீசல் எஸ்யுவியின் விலை, அம்சங்கள், வசதிகள்
கரடுமுரடாக கம்பேக் கொடுத்த மிட்சுபிஷி 7 சீட்டர் - பஜேரோ டீசல் எஸ்யுவியின் விலை, அம்சங்கள், வசதிகள்
Esakki Subaya: தவெகவுடன் மனக்கசப்பா?.. MLA பதவியை மீண்டும் கேட்கும் இசக்கி சுப்பையா.. காரணம் இதுதான்!
Esakki Subaya: தவெகவுடன் மனக்கசப்பா?.. MLA பதவியை மீண்டும் கேட்கும் இசக்கி சுப்பையா.. காரணம் இதுதான்!
ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ், RC புக்.! அரசின் அசத்தல் அறிவிப்பு- Download செய்வது எப்படி.? இதோ வழிமுறை
ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ், RC புக்.! அரசின் அசத்தல் அறிவிப்பு- Download செய்வது எப்படி.? இதோ வழிமுறை
Maternity Leave : ஒரு வருடம் தொடர் விடுமுறை.! மகளிர் எதிர்பார்த்த சூப்பரான அறிவிப்பு - வெளியானது அரசாணை
ஒரு வருடம் தொடர் விடுமுறை.! மகளிர் எதிர்பார்த்த சூப்பரான அறிவிப்பு - வெளியானது அரசாணை
நன்றி மறந்த என்எல்சி; 347 தொழிலாளர்கள் டிஸ்மிஸ்: 713 பேரை நீக்கத் திட்டம்- அரசு உடனே தலையிடக் கோரிக்கை!
நன்றி மறந்த என்எல்சி; 347 தொழிலாளர்கள் டிஸ்மிஸ்: 713 பேரை நீக்கத் திட்டம்- அரசு உடனே தலையிடக் கோரிக்கை!
Embed widget