மேலும் அறிய

ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

ஏற்கனவே அவருக்கு ரத்த குழாய் அடைப்பின் காரணமாக, ஸ்டெண்ட் வைத்துள்ளார். தற்போது நடத்தப்பட்ட பரிசோதனையில் புதிதாக 2 இடங்களில் ரத்தக்குழாய் அடைப்பு உள்ளது. - என தெரியவந்துள்ளது.

பழனி கோவில் ரூ. 100 கோடி நில மோசடி வழக்கில் கைதான சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது -பரிசோதனையில் புதிதாக 2 இடங்களில் ரத்தக்குழாய் அடைப்பு உள்ளதாக மருத்துவர்கள் தகவல்.
 
அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம்
 
பழனி கோவில் அடிவாரம் பகுதியில் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த மாதம் 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில், தனி நபர்களுக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நிலத்தை விற்பனை செய்த விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை (60), சேதுபதி (67) அவர்களுக்கு உதவிய பழனி கவுண்டன்குளம் பகுதியை சேர்ந்த வக்கீல் அன்வர்தீன் (65) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்தநிலையில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வக்கீல் அன்வர்தீனுக்கு கடந்த 7-ந் தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரும்போது உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, நீதிபதி ராஜபிரபு பிணவறை, மத்திய சிறையில், விசாரணை நடத்தினார்.
 
ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதற்கிடையே, சம்பவம் நடந்த சமயத்தில் கொடைக்கானல் சார் பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டனையும், இந்த வழக்கில் போலீசார் கடந்த 6- ந் தேதி கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் மேல் சிகிச்சைக்காக ஜஸ்டின் மணிகண்டன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ரத்த குழாய் அடைப்பு
 
இதுகுறித்து அரசு ராஜாஜி மருத்துவமனை  இருப்பிட அதிகாரிகள் (RMo) கூறுகையில், " மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜஸ்டின் மணிகண்டனுக்கு ஏற்கனவே இதய தொடர்பான பிரச்னைகள் உள்ளது. இந்தநிலையில்  இன்று அவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில்  ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. ஏற்கனவே அவருக்கு ரத்த குழாய் அடைப்பின் காரணமாக, ஸ்டெண்ட் வைத்துள்ளார். தற்போது நடத்தப்பட்ட பரிசோதனையில் புதிதாக 2 இடங்களில் ரத்தக்குழாய் அடைப்பு உள்ளது. அதற்கு, பைபாஸ் அறுவை சிகிச்சை தான் தேவைப்படும் என்பது ஆஞ்சியோ பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. ஆனால், அவர் மற்றும் அவரது உறவினர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்  தான் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்கிறார்களா?, அல்லது வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுக்கப்போகிறார்களா? என்பது விரைவில் தெரியவரும். தொடர்ந்து அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்" என்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் கோப்பை 2026: லட்சக்கணக்கான பரிசுகளுடன் மாபெரும் விளையாட்டுத் திருவிழா!
முதலமைச்சர் கோப்பை 2026: லட்சக்கணக்கான பரிசுகளுடன் மாபெரும் விளையாட்டுத் திருவிழா!
சிவகங்கை சோழபுரத்தில் 195 ஆண்டு பழமையான ஜமீன்தார் கல்வெட்டு கண்டெடுப்பு!
சிவகங்கை சோழபுரத்தில் 195 ஆண்டு பழமையான ஜமீன்தார் கல்வெட்டு கண்டெடுப்பு!
விடுதலையாகி 80 ஆண்டுகள் கடந்தும் பேரவலம்: சாதிய கொடுமைக்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி கண்டனம்!
விடுதலையாகி 80 ஆண்டுகள் கடந்தும் பேரவலம்: சாதிய கொடுமைக்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி கண்டனம்!
மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்: ஆணையாளர் அதிரடி ஆய்வு, பணிகள் தீவிரம்!
மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்: ஆணையாளர் அதிரடி ஆய்வு, பணிகள் தீவிரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்? விஜய்க்கு வந்தது புதிய தலைவலி? களமிறங்கும் 9 மீனவ கிராமங்கள்
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்? விஜய்க்கு வந்தது புதிய தலைவலி? களமிறங்கும் 9 மீனவ கிராமங்கள்
Nirmalkumar: ”திமுகவின் தவறுகளை இன்றைய தலைமுறை அறியவே CM விஜய் உரை” - நிர்மல்குமார் விளக்கம்
”திமுகவின் தவறுகளை இன்றைய தலைமுறை அறியவே CM விஜய் உரை” - நிர்மல்குமார் விளக்கம்
TN Govt: பழனி நிலம் முறைகேடு டூ முன்கூட்டியே கசிந்த ரகசியம் வரை - தூக்கி அடிக்கப்பட்ட குமரகுருபரன் IAS? அதிர்ச்சி பின்னணி
பழனி நிலம் முறைகேடு டூ முன்கூட்டியே கசிந்த ரகசியம் வரை - தூக்கி அடிக்கப்பட்ட குமரகுருபரன் IAS? அதிர்ச்சி பின்னணி
CAG Smart City: ஸ்மார்ட் சிட்டிக்கான ரூ.10 ஆயிரம் கோடி - கார், டிவி என மடைமாற்றாப்பட்ட நிதி - CAG அதிர்ச்சி தகவல்
ஸ்மார்ட் சிட்டிக்கான ரூ.10 ஆயிரம் கோடி - கார், டிவி என மடைமாற்றாப்பட்ட நிதி - CAG அதிர்ச்சி தகவல்
TN Weather News: சென்னை, திருவள்ளூருக்கு வார்னிங் - மற்ற மாவட்டங்களில் மழை வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை, திருவள்ளூருக்கு வார்னிங் - மற்ற மாவட்டங்களில் மழை வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
AIADMK: 2 தொகுதி இடைத்தேர்தல்.. பாஜக ஆதரவை கேட்ட அதிமுக.. வெற்றி நிச்சயம் என நம்பிக்கை!
AIADMK: 2 தொகுதி இடைத்தேர்தல்.. பாஜக ஆதரவை கேட்ட அதிமுக.. வெற்றி நிச்சயம் என நம்பிக்கை!
CM Joseph Vijay: சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலினை கேலி செய்தேனா? .. முதலமைச்சர் விஜய் பரபரப்பு விளக்கம்!
CM Joseph Vijay: சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலினை கேலி செய்தேனா? .. முதலமைச்சர் விஜய் பரபரப்பு விளக்கம்!
திமுக-தான் கேட்கல.. சபாநாயகர் நடுநிலையாகத்தான் செயல்பட்றாரு.. அடித்துச் சொல்லும் பிரேமலதா விஜயகாந்த்
திமுக-தான் கேட்கல.. சபாநாயகர் நடுநிலையாகத்தான் செயல்பட்றாரு.. அடித்துச் சொல்லும் பிரேமலதா விஜயகாந்த்
Embed widget