மேலும் அறிய

CM Vijay: எல்லாரையும் பார்த்த விஜய் இபிஎஸ்-ஐ சந்திக்காதது ஏன்? இதுதான் காரணமோ!

மு.க.ஸ்டாலின் முதல் சீமான் வரை அனைவரையும் இ்ன்று சந்தித்த முதலமைச்சர் விஜய் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இதுவரை நேரில் சென்று சந்திக்கவில்லை.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவரும், நடிகருமான விஜய் நேற்று பதவியேற்றார். பின்னர், முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் விஜய் இன்று சட்டமன்றத்தில்  சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். 

தலைவர்களைச் சந்தித்த முதலமைச்சர் விஜய்:

இன்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை தானே நேரில் சென்று சந்தித்து ஆசி பெற்றார். தேர்தல் களத்தில் இந்த கட்சிகள் அனைத்தும் விஜய்யை மிக கடுமையாக விமர்சித்த நிலையிலும், அவர்களை முதலமைச்சர் ஆன பின்பு தானே நேரில் சென்று விஜய் சந்தித்திருப்பதற்கு பலரும் வரவேற்பையும், வாழ்த்தையும் தெரிவித்துள்ளனர். 

எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்காதது ஏன்?

முக்கிய தலைவர்களைச் சந்தித்த முதலமைச்சர் விஜய் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இதுவரை நேரில் சென்று சந்திக்கவில்லை. அவர் அவரைச் சந்திக்காமல் இருப்பதற்கு அதிமுக-வில் தற்போது நடந்து வரும் உட்கட்சி மோதலே காரணம் என்று கூறப்படுகிறது. சட்டசபைத் தேர்தலில் நடந்த தோல்விக்கு பிறகு அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், எஸ்பி வேலுமணி அணி - எடப்பாடி பழனிசாமி அணி என்று இரு அணியாக அதிமுக உடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை ஓரங்கட்டும் பணியில் சிவி சண்முகம் முன்னெடுப்பில் வேலுமணி தலைமையில் வேலைகள் நடந்து வருகிறது.

தவெக தனிப்பெரும்பான்மை இல்லாமல் தவித்து வந்த சூழலில், அவர்களுக்கு ஆதரவு அளித்து ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் ஒரு தரப்பினரும், தவெக-விற்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்று ஒரு தரப்பினரும் கருத்து மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் வெடித்த பிரச்சினையால் தற்போது அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவே அதிமுக உறுப்பினர்கள் திரும்பியுள்ளனர். இதன் காரணமாகவும், எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் சந்திப்பா?

நாளை அல்லது வரும் நாட்களில் விஜய் முன்னாள் முதலமைச்சராக பதவி வகித்த எடப்பாடி பழனிசாமியை சந்திப்பார் என்று கூறப்படுகிறது. தவெக ஆட்சியமைக்க உறுதுணையாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் தலைவர்களை ஏற்கனவே விஜய் நேரில் சந்தித்து நன்றி கூறியிருந்த நிலையில், திருமாவளவன் - விஜய் சந்திப்பு இதுவரை நிகழவில்லை.

விரைவில் திருமாவளவனை விஜய் சந்திப்பு நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீனையும் நேரில் சந்தித்து ஆசி பெறுவார் என்று கருதப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK: தீர்ந்துபோன சக்தி இல்ல.. உங்களை தீர்த்துக்கட்டப்போகும் சக்தி..! விஜய்யை விளாசித் தள்ளிய அதிமுக!
ADMK: தீர்ந்துபோன சக்தி இல்ல.. உங்களை தீர்த்துக்கட்டப்போகும் சக்தி..! விஜய்யை விளாசித் தள்ளிய அதிமுக!
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
’’கட்சியையே காப்பாத்த முடில; சிரிப்பாய் சிரிக்கும் சிலுவம்பாளையம்’’- ஈபிஎஸ்ஸுக்கு தவெக பதிலடி
’’கட்சியையே காப்பாத்த முடில; சிரிப்பாய் சிரிக்கும் சிலுவம்பாளையம்’’- ஈபிஎஸ்ஸுக்கு தவெக பதிலடி
10 ஆண்டாக மருத்துவர்கள் பற்றாக்குறை; பொது சுகாதாரக் கட்டமைப்பில் கடும் பாதிப்பு!
10 ஆண்டாக மருத்துவர்கள் பற்றாக்குறை; பொது சுகாதாரக் கட்டமைப்பில் கடும் பாதிப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
ADMK: தீர்ந்துபோன சக்தி இல்ல.. உங்களை தீர்த்துக்கட்டப்போகும் சக்தி..! விஜய்யை விளாசித் தள்ளிய அதிமுக!
ADMK: தீர்ந்துபோன சக்தி இல்ல.. உங்களை தீர்த்துக்கட்டப்போகும் சக்தி..! விஜய்யை விளாசித் தள்ளிய அதிமுக!
’’கட்சியையே காப்பாத்த முடில; சிரிப்பாய் சிரிக்கும் சிலுவம்பாளையம்’’- ஈபிஎஸ்ஸுக்கு தவெக பதிலடி
’’கட்சியையே காப்பாத்த முடில; சிரிப்பாய் சிரிக்கும் சிலுவம்பாளையம்’’- ஈபிஎஸ்ஸுக்கு தவெக பதிலடி
Duster 1.0 Turbo Petrol Review: புதிய ரெனால்ட் டஸ்டர் 1.0 டர்போ பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? வாங்குறது வொர்த்தா.? ரிவ்யூவ்
புதிய ரெனால்ட் டஸ்டர் 1.0 டர்போ பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? வாங்குறது வொர்த்தா.? ரிவ்யூவ்
Panaiyur Babu : விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா
விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா
திமுக லஞ்சம் வரலன்னு கிடப்புல போட்டாங்க? நீங்களும் அதே ரூட் எடுத்தா ரூ.5000 கோடி காலி - பாஜக வார்னிங்
திமுக லஞ்சம் வரலன்னு கிடப்புல போட்டாங்க? நீங்களும் அதே ரூட் எடுத்தா ரூ.5000 கோடி காலி - பாஜக வார்னிங்
ஏக்கருக்கு ரூ.10,000 நஷ்டமா? டெல்டாவை உலுக்கும் புதிய உர விலை உயர்வு பின்னணி!
ஏக்கருக்கு ரூ.10,000 நஷ்டமா? டெல்டாவை உலுக்கும் புதிய உர விலை உயர்வு பின்னணி!
Swift முதல் Brezza வரை! பட்ஜெட் விலை கார்களுக்கு தள்ளுபடியை வாரி வழங்கிய மாருதி சுசுகி - எவ்வளவு?
Swift முதல் Brezza வரை! பட்ஜெட் விலை கார்களுக்கு தள்ளுபடியை வாரி வழங்கிய மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget