மேலும் அறிய
மதுரையில் ஓடை உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த வெள்ள நீர்
குழந்தைகள் முதியவர்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையில் தவித்து வருகின்றனர்.

மதுரையில் மழை பாதிப்பு
Source : whats app
மதுரை மாவட்டம் காதக்கிணறு அருகே செம்மியாந்தல் ஆசிரியர் காலனி பகுதியில் ஓடை உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த வெள்ள நீரால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதி அடைந்தனர்.
உபரி நீர் ஓடை உடைந்து குடியிருப்பு பகுதியில் புகுந்தது
மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காதக்கிணறு அருகே உள்ள செம்மியேனந்தல் மற்றும் ஆசிரியர் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பாப்பன்குளம் கிராமப் பகுதியில் இருந்து செல்லக்கூடிய உபரி நீர் ஓடை உடைந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அந்த பகுதியில் இருந்த ஏராளமான தொழில் நிறுவனங்களுக்குள் வெள்ளநீர் புகுந்த நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் முழுவதிலும் நீரில் மூழ்கி சேதம் அடைந்தது.
- Baba Siddique: பரபரப்பு..! மகாராஷ்டிராவில் என்சிபி தலைவர் சுட்டுக் கொலை - குற்றவாளிகள் 2 பேர் கைது
பொதுமக்கள் தவிப்பு
இதே போன்ற ஒவ்வொரு வீடுகளில் முன்பாக இடுப்பு அளவிற்கு வெள்ள நீர் தொடர்ச்சியாக பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஊருக்குள் வெள்ளம் வருவதை தடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் இருந்து உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்கு புகுந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். மேலும் குழந்தைகள் முதியவர்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையில் தவித்து வருகின்றனர்.
மதுரை கர்டர் பாலத்தில் மழை நீர் வெள்ளத்தில் காரில் சிக்கிய நபர்களை மீட்ட காவல்துறையினர் மற்றும் இளைஞர்களுக்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் பாராட்டு.
மதுரையில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக மணி நகர பகுதியில் உள்ள கருடர் மேம்பால பகுதியின் கீழே மழைநீர் தேங்கிய நிலையில் அதில் கார் ஒன்று எச்சரிக்கை மீறி உள்ளே சென்று சிக்கியது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர் சிக்கியபோது காவல்துறை ரோந்து வாகன ஓட்டுநர் தங்கமுத்து என்பவர் சத்தமிட்ட நிலையில் மணிநகர பகுதியைச் சேர்ந்த கார்த்திக், சந்திரசேகர் உள்ளிட்ட மூன்று பேரும் சேர்ந்து காரின் கதவுகளை திறந்து, ரமேஷ் மற்றும் கோபி ஆகியோரை கயிறுகள் கட்டி பத்திரமாக மீட்டனர். இந்நிலையில் வெள்ள நீரில் சிக்கிய காரிலிருந்து இருவரை காப்பாற்றிய காவலர் மற்றும் இளைஞர்களுக்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் பாராட்டு தெரிவித்ததுள்ளர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Uttarkhand: சிறையில் ராமாயண நாடகம் - குரங்கு வேடமிட்ட கைதிகள் - சுவர் ஏறி குதித்து தப்பி ஓட்டம்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - IND Vs AUS W: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா இந்திய அணி? உலகக் கோப்பை லீகில் இன்று மோதல்..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
உலகம்
கல்வி
Advertisement
Advertisement