மேலும் அறிய

உயர்கல்வி படிப்பதற்காக இளநிலை எம்பிபிஎஸ் சான்றுகளை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு

இளநிலை கல்வி பயிலும் போது கொரோனா காலத்தில் மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசுக்கு சேவை செய்துள்ளனர் - நீதிபதி

சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட  மருத்துவ கல்லூரிகளில் பயின்ற பல மாணவ, மாணவிகள் உயர் மருத்துவ கல்வி பயில்வதற்க்கு தங்களின் MBBS கல்வி சான்றிதழ்களை தங்களிடம் ஒப்படைக்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
 
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில்,
 
* மனுதாரர்கள் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை பட்டதாரி படிப்பிற்கு சேரும் பொழுது அரசிற்கு 2 ஆண்டுகள் மருத்துவ சேவை பணியாற்ற வேண்டும் என ஒப்பந்தம் உள்ளது. இதில், தவறும் பட்சத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் உள்ளது. மனுதாரர்கள் மருத்துவ படிப்பினை முழுவதுமாக நிறைவேற்றியுள்ளார் மேலும் கொரானா காலகட்டத்தில் பணியாற்றியுள்ளதாகவும் எனவே மேலும் பணியாற்ற அவசியமில்லை எனவும் தங்களது மருத்துவ கல்வி சான்றிதழ் களை தங்களிடம் வழங்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.
 
இதனை ஏற்று கொண்ட  நீதிபதி மருத்துவ உயர்கல்வி பயில உள்ள மருத்துவ மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.
 
 

மற்றொரு வழக்கு

2வது மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 
தென்காசி மாவட்டம் குற்றாலத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைள் உள்ளனர். மனைவி இறந்ததால், 2008ல் குத்தாலம் என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர் குழந்தைகளை முறையாக பராமரிக்காமல் இருந்துள்ளார். இதனால் கடந்த 2013ல் குத்தாலத்தை கழுத்தை நெறித்து கொலை செய்து, தூக்கில் தொங்க விட்டுள்ளார். தற்கொலை வழக்காக பதிவு செய்த குற்றாலம் போலீசார். பின்னர் கொலை வழக்காக மாற்றி கண்ணனை கைது செய்தனர்.
 
இந்த வழக்கை விசாரித்த தென்காசி மாவட்ட அமர்வு நீதிமன்றம், கடந்த 19.8.2019ல் கண்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தது. இதை எதிர்த்து கண்ணன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு செய்தார்.
 
இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தென்காசி நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தனர். மனுதாரர் மீதமுள்ள தண்டனை காலத்தை சிறையில் அனுபவிக்கும் வகையில் உடனடியாக அவரை சிறையில் அடைக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget