மேலும் அறிய
Advertisement
ரயில்வே வர்த்தக பிரிவுபெற்ற சிறப்பு விருது; மதுரையில் பாராட்டு விழா
மதுரை கோட்ட வர்த்தக பிரிவு இந்த வெற்றியினை டிசம்பர் 11 முதல் டிசம்பர் 15 வரை ஐந்து நாட்கள் கொண்டாடி மகிழ்ந்தது.
இந்திய அளவில் சிறப்பான செயல்பாட்டுக்காக தெற்கு ரயில்வே வர்த்தக பிரிவு அதி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருது பெற்றது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சிறப்பு வெற்றி கேடயம் வழங்கினார்.
Southern Railways is the winner of Commercial shield under Ati Vishisht Rail Seva Puraskar (AVRSP), 2023. In this connection, a week long celebration was conducted by Commercial Branch, Madurai division from 11.12.23 to 15.12.23. As a culmination of the week long celebration, pic.twitter.com/SJGwXCgEVi
— arunchinna (@arunreporter92) December 17, 2023
இந்த கேடயத்தினை அமைச்சரிடம் இருந்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங், முதன்மை தலைமை வர்த்தக மேலாளர் நீனு இட்டியரா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தெற்கு ரயில்வேயில் உள்ளடங்கிய மதுரை, திருச்சி, சேலம், சென்னை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களின் வர்த்தக பிரிவுகளின் கூட்டு செயல்பாட்டுக்கான விருதாக கருதப்படுகிறது. எனவே மதுரை கோட்ட வர்த்தக பிரிவு இந்த வெற்றியினை டிசம்பர் 11 முதல் டிசம்பர் 15 வரை ஐந்து நாட்கள் கொண்டாடி மகிழ்ந்தது.
மதுரை வர்த்தக பிரிவு ஊழியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இறுதி நாளான டிசம்பர் 15 அன்று வர்த்தக அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரை கௌரவிக்கும் வகையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவிற்கு மதுரை கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் டி.எல். கணேஷ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த ஓய்வு பெற்ற வர்த்தக மேலாளர் ஷாஜகான், கண்காணிப்பாளர்கள் ஜோசப் ஜெபஸ்டின், தாதா பாஷா, ராமமூர்த்தி, முரளிதர் தங்கள் பணிக்கால அனுபவங்களை பகிர்ந்து ஊழியர்களை ஊக்குவித்தனர். விழாவில் உதவி வர்த்தக மேலாளர்கள் டி. பாலமுருகன், பி. மணிவண்ணன், அலுவலக கண்காணிப்பாளர் ஜெயா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் சென்னை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Cyclone Michaung: ”சென்னையில் 80 சதவீதம் மின் விநியோகம் சரி செய்யப்பட்டுள்ளது" - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”மழை நீர் வடிகாலுக்கு 4 கோடி கூட செலவு செய்யவில்லை” - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion