மேலும் அறிய

அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு

ACTO-GEO அமைப்பு 2021 தேர்தலின்போது தி.மு.க தேர்தல் வாக்குறுதியின்படி அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி , பிப்.3 முதல் காலவரையறை அற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்னும் சில மாதங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர் அமைப்புகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில், தமிழ்நாடு உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆக்டோ ஜியோ எனப்படும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் நடவடிக்கைக் குழு, பிப்.3 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

ACTO-GEO அமைப்பு 2021 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடுக என வலியுறுத்தி , பிப்.3 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

கோரிக்கைகள்

1.திமுகவின் தேர்தல் வாக்குறுதி 309-ன்படி CPS திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் நிலத்தை அமல்படுத்துக பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வுதியம் வழங்குக

2.தேர்தல் வாக்குறுதி எண்: 187 ன் படி 3.50 லட்சம் காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிடுக.

3) கருணை அடிப்படையில் Group- C பணி நியமனத்திற்கு விதிக்கப்பட்ட மறைமுகத் தடையை நீக்குக.

4) ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் தமிழக பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு வழங்குவது போல் ரூ.7,000 போனஸ் வழங்கிடுக.

5) புற ஆதார முறையில் பணி நியமனம் செய்யும் அரசாணை எண் : 15 ஐ திரும்பப் பெறுக

6) புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் பணிபுரியும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி உயர்த்தி வழங்கிடுக.

7) தி.மு.க.வின் தேர்தல் கால வாக்குறுதி எண் : 310-ன்படி நிர்வாகத் தீர்ப்பாயம் அமைத்திடுக மற்றும் கூட்டுக் குழுவை அமைத்திடுக.

8) காப்பீட்டுத் திட்டத்திற்கு தனிநபர் விருப்பம் பெறாமல் புதுப்பிப்பதை கைவிடுக.

9) தேர்தல் வாக்குறுதி எண் : 311-ன்படி இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கி ஊதிய முரண்பாடுகளைக் களைந்திடுக.

181 பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணிநிரந்தரம் செய்திடுக. 50 ஆயிரம் ஆசிரியர்களின் 2004-2006 தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக வரன்முறைப்படுத்திடுக.

உயர்நிலை /மேனிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நிலை உயர்த்திடுக.

 

  1. தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை/பட்டதாரி ஆசிரியர்கள். ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மூலம் முதன் முறையாக நியமிக்கப்பட்ட நாள்: 16.12.2012 க்கு முன்னர் NCTE விதிகள் 2001 மற்றும் அதற்கு முன்னர் மாநில அரசின் பணி நியமன விதிகளின்படி நியமிக்கப்பட்ட இடைநிலை/பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியில் தொடரவும். பதவி உயர்வில் செல்லவும் (TET) தேர்விலிருந்து விலக்கு அளிக்க தமிழ்நாடு குழந்தைகள் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2011 விதிகள் பிரிவு 16 மற்றும் TET அரசாணை எண்:181 பத்தி 7 இல் விதித் திருத்தம் செய்திடுக.
  2. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நேரடி பணிநியமனத்திற்கு 1 முதல் 8 வகுப்புகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET), 9 முதல் 12 வகுப்புகளுக்கு (TRB) போட்டித் தேர்வு என ஒரே தேர்வு (ONE EXAM POLICY) கொள்கையை பின்பற்றிடுக.
  3. TET தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை எவ்வித நிபந்தனையும் இல்லாமல் நிரந்தரப்படுத்துக.13. இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.
  4. இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெண் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் / பதவி உயர்வில் அருகாமை /விரும்பிய பள்ளிகளுக்கு மாறுதல் வழங்கிட (விதி) திருத்தம் செய்திடுக.
  5. சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண்: 313ன் படி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்குக. அனைத்து துறை காலிப் பணியிடங்களில் கல்வித் தகுதிக்கேற்ப பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிடுக. சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதில் பாரபட்சத்தைாக் கைவிட்டு 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்குக. அதேபோல் சிறப்புக் காலமுறை ஊதிய ஊழியர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் உரிய பணி நியமனம் வழங்குவதை உறுதிசெய்திடுக.
  6. வருவாய்த் துறை கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக ரூ.15,700/-அடிப்படை ஊதியம் வழங்குக. அதேபோல் CPS இறுதித் தொகையில் அரசுப் பங்குத் தொகையையும் சேர்த்து வழங்கிடுக.
  7. நீதிமன்றத் தீர்ப்பின்படி சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை ஓய்வூதியத்திற்கு பொருந்தும் வகையில் அரசாணை வெளியிடுக. Unskille என அறிவித்திடுக.
  8. கிராம ஊராட்சி செயலர்களுக்கு ஏனைய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் தேர்வுநிலை, சிறப்பு நிலை, ஓய்வூதியம், விடுப்புக் காலம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும். மக்கள் நலப்பணியாளர்கள் MGNREGA கணிணி உதவியாளர்கள் மற்றும் TSC ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.
  9. சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண்: 153-ன்படி எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்ட ஊழியர்கள், காசநோய் பணியாளர்கள், ஊர்புற நூலகர்கள், தூய்மைப் பணியாளர், தூய்மைக் காவலர்கள் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குநர்கள் மற்றும் அரசுத் துறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்து வரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக. சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண் எண் : 317-ன்படி கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் காலமுறை ஊதியம் வழங்குக.

20.தொழில்நுட்ப ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைந்திடுக.

  1. அரசின் மொத்த வரி வருவாய் 70%-திற்கும் மேல் ஈட்டிக் கொடுக்கக் கூடிய வணிகவரித் துறையில் நீண்ட காலமாக நிலவி வரும் முதுநிலைப் பிரச்சனைக்குரிய உச்சநீதிமன்ற வழக்கை விரைவில் முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்திடுக.

இல்லையெனில் என்ன நடக்கும்?

19.01.2026 முதல் 30.01 2026 வரை தமிழகத்தின் 4 முனைகளில் இருந்து ஆசிரியர், அரசு ஊழியர் சந்திப்பு இயக்கம்

31.01.2026 (சனிக்கிழமை) அன்று மாவட்ட தலைநகரில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

பிப்.3 முதல் காலவரையறை அற்ற வேலைநிறுத்தம்

அரசு ஊழியர், ஆசிரியர்களே..! அணி திரண்டு, ஆர்ப்பரித்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்போம், கோரிக்கைகளை வென்றிடுவோம் என்று ஆக்டோ ஜியோ சூளுரைத்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TN Weather: வங்கக் கடலில் புயல் சின்னம்? பிப்ரவரி 15-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் எச்சரிக்கை
வங்கக் கடலில் புயல் சின்னம்? பிப்ரவரி 15-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் எச்சரிக்கை
Nainar Nagendran: மல்லுக்கட்டும் திமுக-காங்., .. பாஜகவிற்கு ஆட்சி அதிகாரம் வேண்டாம் - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
Nainar Nagendran: மல்லுக்கட்டும் திமுக-காங்., .. பாஜகவிற்கு ஆட்சி அதிகாரம் வேண்டாம் - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
AI Flight Crash: திட்டமிட்டு இன்ஜினை ஆஃப் செய்த பைலட்? 260 பேரை காவு வாங்கிய விமான விபத்து - அதிர்ச்சி ரிப்போர்ட்
AI Flight Crash: திட்டமிட்டு இன்ஜினை ஆஃப் செய்த பைலட்? 260 பேரை காவு வாங்கிய விமான விபத்து - அதிர்ச்சி ரிப்போர்ட்
​
"வழங்குவது மதிப்பூதியம் அல்ல... அவமதிப்பூதியம்!" - கவுரவ விரிவுரையாளர் விவகாரத்தில் அன்புமணி இராமதாஸ் காட்டம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: வங்கக் கடலில் புயல் சின்னம்? பிப்ரவரி 15-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் எச்சரிக்கை
வங்கக் கடலில் புயல் சின்னம்? பிப்ரவரி 15-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் எச்சரிக்கை
Nainar Nagendran: மல்லுக்கட்டும் திமுக-காங்., .. பாஜகவிற்கு ஆட்சி அதிகாரம் வேண்டாம் - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
Nainar Nagendran: மல்லுக்கட்டும் திமுக-காங்., .. பாஜகவிற்கு ஆட்சி அதிகாரம் வேண்டாம் - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
AI Flight Crash: திட்டமிட்டு இன்ஜினை ஆஃப் செய்த பைலட்? 260 பேரை காவு வாங்கிய விமான விபத்து - அதிர்ச்சி ரிப்போர்ட்
AI Flight Crash: திட்டமிட்டு இன்ஜினை ஆஃப் செய்த பைலட்? 260 பேரை காவு வாங்கிய விமான விபத்து - அதிர்ச்சி ரிப்போர்ட்
​
"வழங்குவது மதிப்பூதியம் அல்ல... அவமதிப்பூதியம்!" - கவுரவ விரிவுரையாளர் விவகாரத்தில் அன்புமணி இராமதாஸ் காட்டம்!
Gold Silver Rate Today Feb.12: இப்படியே கன்ட்டினியூ பண்ணிருப்பா.! இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா.?
இப்படியே கன்ட்டினியூ பண்ணிருப்பா.! இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா.?
Cv shanmugam: விசில் அரசியல் செல்லாது - சி.வி. சண்முகம் வார்னிங்!
Cv shanmugam: விசில் அரசியல் செல்லாது - சி.வி. சண்முகம் வார்னிங்!
Parijatham: வர்ஷினியை கல்யாணம் செய்வானா ராகவன்? கணவனின் திருமணத்தை தடுப்பாளா ஸ்ரீஜா?
Parijatham: வர்ஷினியை கல்யாணம் செய்வானா ராகவன்? கணவனின் திருமணத்தை தடுப்பாளா ஸ்ரீஜா?
Edappadi Palaniswamy: 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் ஜெயிப்பாரா? - இபிஎஸ் சொன்ன கணிப்பு!
Edappadi Palaniswamy: 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் ஜெயிப்பாரா? - இபிஎஸ் சொன்ன கணிப்பு!
Embed widget