(Source: ECI/ABP News/ABP Majha)
ABP NADU IMPACT: போதையில் காவலர் ஒருவர் பணம் வசூல்; ஏபிபி நாடு எதிரொலியால் சஸ்பெண்ட் நடவ்டிக்கை
காவலர் முத்து செல்வத்தை தற்போது சஸ்பென்ட் செய்துள்ளோம். தொடர்ந்து இது குறித்து விசாரித்து வருவதாக ஏபிபி நாடுக்கு சிவகங்கை எஸ்.பி., தகவல்.
சென்னை பெரு வெள்ளத்தில் காவலர்கள் பணி பெருமைப்படும் விதமாக அமைந்தது. இதனால் காவல்துறையினருக்கு இணையத்தில் பாராட்டு குவிந்தது. ஆனால் காவல்துறையில் சில அதிகாரிகள் மற்றும் காவலர்கள் செய்யும் தவறான செயல் பொதுமக்களை முகம் சுழிக்க செய்கிறது. அப்படியான சம்பவம் ஒன்று சிவகங்கையில் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் குடி போதையில் காவல்துறை சீருடையில் பணம் வசூல் செய்ததாக ஏபிபி நாடு செய்தித் தளத்தில் “ சிவகங்கையில் பாதுகாப்பு பணிக்கு மதுபோதையில் வந்த காவலர்; வாகன ஓட்டிகளிடம் மிரட்டி வசூல் வேட்டை ” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த சூழலில் காவலர் முத்து செல்வம் சஸ்பென்ட் செய்யப்பட்டதாக சிவகங்கை எஸ்.பி., பி.கே.அரவிந்த் நம்மிடம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் பனங்காடி சாலையில் உள்ள காப்பகத்தில் பாதுகாப்பு பணிக்காக வந்த காவலர் செல்ல முத்து என்பவர், மதுபோதையில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ வைரல்@svgsocialmedia #sivagangai @SivagangaiDist @abpnadu pic.twitter.com/8PaWkgwBUe
— arunchinna (@arunreporter92) December 13, 2023
சிவகங்கை மாவட்டம் பனங்காடி சாலையில் அன்னை இல்லம் என்ற தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கியுள்ள மாற்றுத்திறனாளி ஒருவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதுகாப்பு கேட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒரு காவலர் அங்கு பணியில் இருக்கும் படி உத்தரவிட்டிருந்ததாக கூறப்படும் நிலையில் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் செல்லமுத்து என்பவர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இரண்டு நாட்களாக பாதுகாப்பு பணியில் இருக்கும் செல்ல முத்து மது போதையில் பனங்காடி சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் ரூ.500 முதல் ஆயிரம் வரை பணம் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. பெண்களையும் விட்டு வைக்காமல் காவலர் சீருடையில் செல்லமுத்து தள்ளாடும் மது போதையில் பணம் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த வழியாக சென்ற பலரும் மனம் நொந்துகொண்டனர். இதையடுத்து ட்விட்டர் மூலம் சிவகங்கை மாவட்ட காவல்துறைக்கு கவனத்திற்கு கொண்டு சென்றோம். அதைத் தொடர்ந்து செய்தியாகவும் வெளியிட்டோம். இந்நிலையில் காவலர் முத்து செல்வம் சஸ்பெண் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நாம் சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பி.கே.அரவிந்தை தொடர்பு கொண்டு பேசினோம்,” காவலர் முத்து செல்வத்தை தற்போது சஸ்பென்ட் செய்துள்ளோம். தொடர்ந்து இதுகுறித்து விசாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
மேலும் சென்னை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Cyclone Michaung: ”சென்னையில் 80 சதவீதம் மின் விநியோகம் சரி செய்யப்பட்டுள்ளது" - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா