மேலும் அறிய
Advertisement
ரயிலில் இனி நிம்மதியா தூங்கலாம்; முதன் முதலாக மதுரையில் அறிமுகமான திட்டம்
பயணிகளுக்கு தூய்மையான, சுகாதாரமான கம்பளிப் போர்வை வழங்குவதற்கு தெற்கு ரயில்வேயில் முதன்முறையாக மதுரை கோட்டத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கம்பளி போர்வையை சுகாதாரமாக பாதுகாத்து தொடர்ந்து உபயோகப்படுத்த முடியும். பாண்டியன் எக்ஸ்பிரஸ் பயணிகள் இந்த புதிய வசதியை வெகுவாக ஆதரித்து பாராட்டி மகிழ்ந்துள்ளனர்.
ரயிலில் துணி உறையுடன் கம்பளி போர்வை வழங்கும் திட்டம் முதன் முதலாக மதுரையில் அறிமுகம்
ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இரண்டு படுக்கை விரிப்புகள், தலையணை, தலையணை உறை, கம்பளிப் போர்வை, கைத்துண்டு ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இதில் கம்பளி போர்வை, தலையணை தவிர மற்ற படுக்கை துணிகள் ஒவ்வொரு உபயோகத்திற்கு பிறகும் தூய்மையாக சலவை செய்து வழங்கப் படுகிறது. கம்பளி போர்வை மட்டும் 15 நாட்கள் அல்லது 30 நாட்களுக்கு ஒரு முறை உலர் சலவை செய்யப்படுகிறது. இந்த உலர் சலவை சம்பந்தமாக பயணிகள் பல்வேறு கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவித்து வந்தனர்.
புதிய வசதியை வெகுவாக ஆதரித்து பாராட்டி மகிழ்ந்துள்ளனர்
ஆகவே பயணிகளுக்கு தூய்மையான, சுகாதாரமான கம்பளிப் போர்வை வழங்குவதற்கு தெற்கு ரயில்வேயில் முதன்முறையாக மதுரை கோட்டத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கம்பளி போர்வைகள் தனித்தனி துணி உறைகளோடு கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) முதல் சென்னை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த புதிய வசதி மதுரை - சென்னை - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தொடர்ந்து செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த துணி உறைகள் கம்பளி போர்வை உள்ளிட்டப்பட்டு வெல்கிரோ ஒட்டும் முறைப்படி ஒட்டி வெளியே வராமல் பாதுகாக்கப் படுகிறது. இதன் மூலம் கம்பளி போர்வையை சுகாதாரமாக பாதுகாத்து தொடர்ந்து உபயோகப்படுத்த முடியும். பாண்டியன் எக்ஸ்பிரஸ் பயணிகள் இந்த புதிய வசதியை வெகுவாக ஆதரித்து பாராட்டி மகிழ்ந்துள்ளனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Theni: காட்டாற்று வெள்ளம் வந்தால் 10 நாளைக்கு சொந்த ஊருக்கு போக முடியாது: பழங்குடியின மக்கள் வேதனை
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Tiruvannamalai Deepam: ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion