Theni: காட்டாற்று வெள்ளம் வந்தால் 10 நாளைக்கு சொந்த ஊருக்கு போக முடியாது: பழங்குடியின மக்கள் வேதனை
சின்னூர் மலை கிராமத்திற்கு செல்லும் மலைவாழ் பழங்குடியின மக்கள் ஆற்றைக் கடக்க முடியாத நிலை ஏற்பட்டதால் மலை கிராமத்தில் உள்ள அவர்களது வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கல்லாற்றில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டதால் வீடு திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் மலை கிராம மக்கள். .ஆண்டுதோறும் பருவ மழை காலங்களில் இதே போன்ற சிரமங்களை அனுபவித்து வருவதாக மலை கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில், மழை காலங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மருந்து மாத்திரைகள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள வெள்ளகெவி ஊராட்சிக்கு உட்பட்டது சின்னூர் மலை கிராமம். இந்த மலை கிராமம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது, என்றாலும் இவர்களின் சாலை போக்குவரத்து என்பது பெரியகுளம் பகுதி வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் நேற்று முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பெரியகுளம் பகுதியில் உள்ள கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சின்னூர் மலை கிராமத்திற்கு செல்லும் மலைவாழ் பழங்குடியின மக்கள் ஆற்றைக் கடக்க முடியாத நிலை ஏற்பட்டதால் மலை கிராமத்தில் உள்ள அவர்களது வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்சனை குறித்து மலை கிராம மக்கள் கூறுகையில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழை காலங்களில் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள கல்லாறு மற்றும் குப்பம்பாறை ஆறு இரண்டு ஆறுகளில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டால் பத்து நாட்கள் முதல் 15 நாட்கள் ஆற்றை கடக்க முடியாத நிலை ஏற்பட்டுவதாகவும், இதனால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்து மாத்திரை உள்ளிட்டவைகள் கொண்டு செல்ல முடியாத நிலையில் விளைந்த விளைபொருட்களை விற்பனைக்காக பெரியகுளம் கொண்டு செல்ல முடியாத நிலையில் ஏற்பட்டு வதாகவும் தெரிவிப்பதோடு,
" சாகுற வரை என்கூட இருப்பாரு..." நெஞ்சில் விஜய் டாட்டூ போட்ட தாடி பாலாஜி...
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இதேபோன்று ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பத்து நாட்களாக கடக்க முடியாத நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்ணை சிகிச்சைக்காக கொண்டுவர முடியாத நிலையில், நீர் வற்றிய பின் கொண்டு வந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உயிரிழந்தார் என்கின்றனர். மேலும் மழை காலங்களில் தொடர்ந்து மலை கிராம மக்கள் ஆற்றைக் கடக்க முடியாத நிலைக்கு பாலம் கட்டி தர 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், பெண் உயிர் இழப்பிற்கு பின் பாராளுமன்ற உறுப்பினர் அரசு அதிகாரிகள் வந்து நேரில் பார்வையிட்டு ஒரு மாத காலத்திற்குள் பணிகள் துவக்கப்படும் என்று கூறியும் இதுவரையில் எந்த பணிகளும் துவக்கப்படவில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.