மேலும் அறிய

Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?

Mega Job Fair 2024 Chennai: மாதவரத்தில்‌ அமைந்துள்ள புனித அன்னாள்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில் ‌( St.Anne’s Arts and Science College) காலை 08.00 மணி முதல்‌ மாலை 03.00 மணி வரை நடத்தப்பட உள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையங்கள் இணைந்து 14.12.2024 அன்று தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்‌ ரஷ்மி சித்தார்த்‌ ஐஜகடே தெரிவித்துள்ளார்‌.

இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது:

’’வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித்துறையின்‌ கீழ்‌ ‌ சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்‌நெறி வழிகாட்டும்‌ மையம் இயங்கி வருகிறது. இதன்‌ சார்பில் மாபெரும்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ 14.12.2024 சனிக்கிழமை அன்று நடைபெறுகிறது.

எங்கே? எப்போது?

மாதவரத்தில்‌ அமைந்துள்ள புனித அன்னாள்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில் ‌( St.Anne’s Arts and Science College) காலை 08.00 மணி முதல்‌ மாலை 03.00 மணி வரை நடத்தப்பட உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில்‌ 200-க்கும்‌ மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்‌ கலந்து கொண்டு 20,000-க்கும்‌ மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்‌.

யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?

இம்முகாமில்‌ 8ஆம்‌ வகுப்பு தேர்ச்சி முதல்‌ பிளஸ் 2 தேர்ச்சி, பட்டதாரிகள்‌, பட்டயப் படிப்பு படித்தவர்கள்‌, ஐ.டி.ஐ, தொழில்‌ கல்வி கற்றவர்கள்‌, பொறியியல்‌ பட்டம்‌, கணினி இயக்குபவர்கள்‌, தையல்‌ கற்றவர்கள்‌ என அனைத்து வித தகுதியுள்ள நபர்களும்‌ கலந்து கொள்ளலாம்‌. இம்முகாமில்‌ கலந்து கொள்ள அனுமதி இலவசம்‌.

இம்முகாமில்‌ தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகத்தின்‌ இலவச திறன்‌ மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில்‌ மையத்தின்‌ தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள்‌, மாவட்ட முன்னோடி வங்கியின்‌ வாயிலாக வங்கி கடன்‌ வழிகாட்டுதல்கள்‌ ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.

தனியார்‌ துறையில்‌ பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் WWW.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ பதிவு செய்து, இந்த வேலைவாய்ப்பு முகாமில்‌ கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கலந்துகொள்வது எப்படி?

தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில்‌ பணியமர்த்தப்படும்‌ நபர்களின்‌ வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண்‌ ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும்‌, இந்த முகாமில்‌ கலந்துக்கொள்ள விருப்பம்‌ உள்ள இளைஞர்கள்‌ சென்னை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தினை நேரில்‌ அணுகியோ, https://forms.gle/qsZbxrrSn547L9ep7 என்ற கூகுள் இணைப்பிலோ தங்களது விவரங்களை பதிவு செய்துகொண்டு பயன்பெறலாம்’’.

இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ரஷ்மி சித்தார்த்‌ ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார்‌.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Embed widget