மேலும் அறிய
மதுரை மாநகராட்சி ஊழல்: உதயநிதி ஸ்டாலின் அதிரடி பதில்! மேயர் மீது நடவடிக்கை இருக்குமா? பரபரப்பு தகவல்!
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்", என பதில் அளித்துச் சென்றார்.

உதயநிதி ஸ்டாலின்
Source : whats app
மதுரை மாநகராட்சி ஊழல் குறித்த கேள்வி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு வார்த்தை பதில்.
உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மதுரை மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றனர். மேலும், மாவட்ட ஆட்சித் தலைவர் பீரவின்குமார், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்..,"மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற வரும் அரசு திட்டப்பணிகள் குறித்து மேற்கொள்ளப்பட்டது. அரசின் பல்வேறு திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தொய்வாக நடைபெறக்கூடிய அரசு திட்டப்பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிகள் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறுகிறது. உலகெங்கும் இருந்து 29 அணிகள் இப்போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளன.
முதல்வர் கோப்பையில் வெளிமாநில வீரர்கள் பங்கேற்பது தொடர்பான கேள்விக்கு
" முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பிற மாநில விளையாட்டு வீரர்களை சொல்ல முடியாது. பிற மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தமிழகத்தில் தங்கி படிக்கும் போது அவர்களை விளையாட்டு போட்டிகளில் அனுமதிக்கலாம். முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் ஒவ்வொரு ஆண்டும் சரியான வழிமுறைகள் பின்பற்றப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கான தகுதி, திறமைகள் இருக்கும் பட்சத்தில் முதலமைச்சர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது.
மாநகராட்சி ஊழல் முறைகேட்டில் மேயர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுமா ?
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்", என பதில் அளித்துச் சென்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement




















