மேலும் அறிய
தனுஷின் நெகிழ்ச்சி: தாய் 3 மாதம் கர்ப்பமாக 120KM நடந்த சோகம்! ரசிகர்கள் மனதில் நிற்கும் மதுரை பேச்சு!
இன்னைக்கு இருக்கிறத விட நாளைக்கு நாம் இருக்கும் இடம் சிறப்பாக இருக்க வேண்டும், அதற்கு தான் சண்டை செய்ய வேண்டும்.

தனுஷ்
Source : whats app
ஜெயிக்கிறோமோ.. தோக்குறோமோ... முதலில் சண்டை செய்ய வேண்டும். ஆனால், சண்டை அங்கு செய்யாதீர்கள் சண்டையை படிப்பில் செய்யுங்கள், உழைப்பில் செய்யுங்கள். சண்டை நமக்குள் இருக்க வேண்டும் மனதுக்குள்ளே இருக்க வேண்டும் - ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் தனுஷ்.
இட்லி கடை திரைப்பட பிரமோஷன்
மதுரையில் இட்லி கடை திரைப்பட பிரமோஷன் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும் இயக்குனருமான தனுஷ், நடிகர்கள் அருண் விஜய், பார்த்திபன், இளவரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்டத்தில் உள்ள ஏராளமான தனுஷ் ரசிகர்கள் வருகை தந்தனர்.
தனது தாய் குறித்து மனமுருகி பேசிய தனுஷ் :
”எனது அப்பா சென்னைக்கு வர பஸ்ஸுக்கு காசு இல்லை. மதுரையில் இருக்கிற சொந்தக்காரர்கள் வீட்டிற்கு வந்து பணம் வாங்கிட்டு மெட்ராசுக்கு போவதற்கு நினைத்தபோது, மதுரைக்கு வரவும் பஸ்ஸுக்கு பணம் இல்ல. பணம் வாங்கிட்டு மெட்ராசுக்கு வர வேண்டும், என்பதற்காக செல்வராகவன் 4 வயது இருக்கும்போது எங்க அம்மா 3 மாசம் கர்ப்பமாக இருந்த போது அவங்க ஊரில் இருந்து மதுரைக்கு நடந்தே கிட்டத்தட்ட 120 கிலோமீட்டர் நடந்தே வந்து ஒரு சொந்தக்காரங்களை பார்க்க வந்தாங்க, அப்படி எங்க அப்பாவும், எங்க அம்மா கர்ப்பமாக இருந்தபடி கால் கடுக்க நடந்து வந்து மேடை தான் இந்த மேடை. இந்த மேடையில் அவர்களை கொண்டு வர எவ்வளவு முயற்சி செய்தேன். அவர்கள் இருந்திருந்தால் இன்னும் இந்த மேடை முழுமையாகவும் நிறைவாகவும் இருந்திருக்கும். ஏதோ ஒரு சில காரணங்களால் அவர்களை அழைத்து வர முடியவில்லை. மதுரையில் ஆடுகள பட சூட்டிங் போது 300 நாட்கள் இருந்தேன். ஆடுகளம் படத்திற்கு மதுரையில் நான் ஓடாத ஆடாத தெரு கிடையாது, திருப்பரங்குன்றத்தில் 30 நாள் இருந்தேன்; மதுரையில் இருந்த நாட்களில் நான் அமைதியாக நிம்மதியாக இருந்தேன். நான் இந்த மண்ணை சேர்ந்தவன் தான் இந்த ஊர் ஆள் மாதிரி தான் நான் இருப்பேன்” என்றார்.
ஜெயிக்கிறோமா இல்லையா முதலில் சண்டை செய்ய வேண்டும் என்ற டயலாக் குறித்த கேள்விக்கு?
ஜெயிக்கிறோமோ!! தோக்குறோமோ!!! முதலில் சண்டை செய்ய வேண்டும் ஆனால் சண்டை அங்கு செய்யாதீர்கள் சண்டையை படிப்பில் செய்யுங்கள் உழைப்பில் செய்யுங்கள் !!! சண்டை நமக்குள் இருக்க வேண்டும் மனதுக்குள்ளே இருக்க வேண்டும். இன்னைக்கு இருக்கிறத விட நாளைக்கு நாம் இருக்கும் இடம் சிறப்பாக இருக்க வேண்டும், அதற்கு தான் சண்டை செய்ய வேண்டும். படத்தில் அந்த டயலாக் மாஸாக இருக்கலாம் ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை சண்டை அங்கு செய்யாதீர்கள் உங்களுக்குள் செய்யுங்கள் என்றார்.
படிப்பை மட்டும் நம்ம கிட்ட இருந்து எடுத்துக்க முடியாது சிதம்பரம் என்ற டயலாக் குறித்த கேள்விக்கு ?
இதுவரைக்கும் கேட்ட வசனங்களிலே சிறப்பான வசனம் இது தான் என்றார். வாரவாரம் ஒவ்வொரு ரசிகர்களையும் சந்திப்பேன் விரைவில் மதுரை ரசிகர்களை சந்திப்பேன் என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















