மேலும் அறிய
Advertisement
Madurai Corporation: உடல்களை இலவசமாக எரியூட்ட மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை
இறந்தவர்களின் உடல்களை இலவசமாக எரியூட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று பரிசீலனை செய்வதாக தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி மயானங்களில் உடல்களை கட்டணமின்றி இலவசமாக எரியூட்ட மாநகராட்சி கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை, பரிசீலனை செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மேயர் இந்திராணி பொன்வசந்த் மாமன்ற கூட்டத்தில் தகவல்.
மாநகராட்சியின் 100 வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றுள்ளனர்
மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநகராட்சி மைய அலுவலக கட்டிடத்தில் இம்மாதத்திற்கான மாமன்ற கூட்டம் மதுரை மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலையில் மதுரை மாநகராட்சியின் 100 வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தின் தொடக்கமாக வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த மக்களுக்கு மாமன்ற கூட்டத்தில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கூட்டத்தில் தமிழகத்திற்கு மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட் நகலை கிழித்தும், கண்களில் கருப்புத்துணி கட்டியும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மாமன்ற கூட்டத்தில் கோஷம்
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு நன்றி தெரிவித்த 62 வது வார்டு கவுன்சிலர், மாமன்ற கூட்டத்தில் கடந்த முறை பிரச்னை செய்து சஸ்பென்ட் செய்யப்பட்ட மாமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்பதற்கான ஆணையை பெற்றார். இந்நிலையில் மாமன்ற கூட்டத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு நன்றி தெரிவித்து நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத ஒன்றிய அரசை கண்டித்து திமுக மாமன்ற உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தில் கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்கள். வஞ்சிக்காதே... வஞ்சிக்காதே... தமிழக மக்களை வஞ்சிக்காதே...என கோஷமிட்டனர்.
உடல்களை கட்டணமின்றி எரியூட்ட கோரிக்கை
மதுரை மாநகராட்சி மற்றும் தமிழக அரசின் திட்டங்கள், அறிவிப்புகளை சமூக ஊடகங்களான X தளம், பேஸ்புக், வாட்ஸ் ஆஃப், இன்ஸ்ட்டாகிராமில் வெளியிட மற்றும் சமூக ஊடகங்களை கண்காணிக்க தனியார் நிறுவனத்துடன் மாநகராட்சி ஒப்பந்தம், சென்னையை சேர்ந்த All Good Events எனும் நிறுவனத்திற்கு மாநகராட்சி சார்பில் மாதந்தோறும் 99,120 ரூபாய் பணம் செலுத்தி பணிகளை மேற்க்கொள்ள மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மயானங்களில் இறந்தவர்களின் உடல்களை எரியூட்ட 1,350 ரூபாய் முதல் 3,450 ரூபாய் வரை கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இறந்தவர்களின் உடல்களை கட்டணமின்றி இலவசமாக எரியூட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தார்கள். இதனையடுத்து மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மேயர் இந்திராணி பொன்வசந்த் என பதிலளித்து பேசினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை தொடர் உயர்வு! மீண்டும் ரெட் அலர்ட்! அச்சத்தில் கேரள மக்கள்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Pinarayi Vijayan: கேரளாவில் என்ன நடவடிக்கை? உயிரிழப்பு எவ்வளவு - முதல்வர் பினராயி விஜயன் பேட்டி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
விழுப்புரம்
கோவை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion