மேலும் அறிய
Madurai Power Showdown: மதுரை மாநகரில் நாளை (9.11.24) எங்கெல்லாம் கரண்ட் கட் தெரியுமா...?
பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும்.

மதுரை மாநகர் மின்தடை
Source : ABPLIVE AI
மதுரை மாநகர் பகுதியில் பல்வேறு பகுதிகளில் மாதாந்திர மின் பாதை பராமரிப்பு பணிக்காக 9.11.24 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 வரையில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
மின் பாதை பராமரிப்பு பணி
தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும்போது அதுபற்றி மின்வாரிய துறை மூலம் அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியில் இருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
மின்வாரிய செய்தி குறிப்பு
அந்தவகையில் தமிழ்நாடு மின் வாரிய மதுரை மாநகர் மேற்கு செயற் பொறியாளர் சி.லதா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; ”09.11.2024 (சனிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 110/33-11 கி.வோ அரசரடி உபமின்நிலையம் 11கேவி விராட்டிபத்து உயரழுத்தமின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் மதுரை மாநகரில் கீழ்காணும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்
சம்மட்டிபுரம் மெயின்ரோடு, ஸ்ரீராம் நகர், MM நகர், HMS காலனி, டோக்நகர் 7வது தெரு முதல் 15வது தெரு வரை, கோஆப்டெக்ஸ் காலனி, ஜெய் நகர், ராஜராஜேஸ்வரி நகர், இருளாண்டி தேவர் காலனி, கிருதுமால் நகர், ஜானகி நகர், ஆனந்தா நகர், தேவகி ஸ்கேன், வெள்ளைகண்னு தியேட்டர் ரோடு, பிக்பஜார், பொன்மேனிபுதுர், தேனி மெயின்ரோடு ஈத்காபில்டிங் வரை, பாண்டியன்நகர்.
காளவாசல், தேனிமெயின்ரோடு, வ.உ.சி.தெரு, திருமலைகாலனி பாரதியார் தெரு, பல்லவன்நகர், முடக்குசாலை, இந்திராணி நகர், பிள்ளையார்கோவில் தெரு, பாஸ்டின்நகர், BB காலணி, INTUC காலணி, நடராஜ்நகர், கோச்சடை, சாந்திசதன், வைகைவிலாஸ், அங்காளஈஸ்வரி நகர், SVK நகர், அன்னைபாரத், ஆபிசர்ஸ் டவுன்.
மேலும் மதுரை மாவட்டம் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - வழக்கு வழக்கு மேல்... சென்னையை தொடர்ந்து மதுரையிலும் நடிகை கஸ்தூரி மீது பாய்ந்த வழக்குகள்
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
பொழுதுபோக்கு
இந்தியா
ட்ரெண்டிங்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion