மேலும் அறிய
மதுரையில் மோசமான வானிலை காரணமாக விமானம் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு !
ஹைதராபாத்தில் இருந்து பயணிகளுடன் மதுரை வந்த இண்டிகோ விமானம் மோசமான வானிலை காரணமாக நீண்ட நேரம் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விமானம்
Source : whats app
மோசமான வானிலை காரணமாக பயணிகளுடன் நீண்ட நேரம் விமானம் வானில் வட்டம் இடித்தது பரபரப்பை ஏற்படுத்தியதி.
சிவகங்கை பகுதிக்கு திருப்பி விடப்பட்டது விமானம்
மதுரை அவனியாபுரம் அருகே மதுரை விமானநிலையம் அமைந்துள்ளது. இந்த விமானநிலையம் தென்மாவட்ட மக்களுக்கு மிகவும் முக்கியதுவம் வாய்ந்த ஒன்றாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் இருந்து வழக்கம் போல் இன்று மாலை 3 மணிக்கு பயணிகளுடன் புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் 3:25 மணிக்கு புறப்பட்டது. இந்த நிலையில் சரியாக நாலு முப்பது மணி அளவில் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானம் மதுரை மாவட்டத்தில் மோசமான வானிலை காரணமாக சிவகங்கை பகுதிக்கு திருப்பி விடப்பட்டது.
தரையிரக்கப்பட்ட விமானம்
சிவகங்கை பகுதிகளில் இரண்டு மூன்று முறை வட்டம் அடித்த நிலையில் 5:40 மணிக்கு மேல் மீண்டும் வானிலை சரியான பிறகு மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக பயணிகளுடன் நீண்ட நேரம் விமானம் வானில் வட்டம் இடித்தது பரபரப்பை ஏற்படுத்தியதி.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















