மேலும் அறிய
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்க ஆசையா? கடைசி தேதி இதுதான் உடனே அப்ளே பண்ணுங்க !
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு பட்டயப் படிப்பிற்கான இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள்: 23.05.2025

மாணாக்கர்கள்
அரசு பாலிடெக்னிக் கல்லூரி பதிவுக் கட்டணமாக ரூ150/-யை விண்ணப்பதாரர் Debit Card /Credit Card/Net Banking இணையதள வாயிலாக செலுத்தலாம். SC/ST பிரிவினருக்கு பதிவுக் கட்டணம் செலுத்த அவசியமில்லை.
அம்பலக்காரன்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி
மதுரை மாவட்டம், மேலுார் தொகுதிக்கு உட்பட்ட அம்பலக்காரன்பட்டியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ளதால் ஏராளமான மாணவர்கள் இந்த பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் வரும் கல்வி ஆண்டில் முதலாவது ஆண்டு படிக்க உள்ள மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளது.
கல்லூரியில் உள்ள பிரிவுகள் என்ன?
சிவில் (civil), மெக்கானிக்கல் (Mechanical), எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (Electrical and Electronics), எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் (Electronics & Communication) ஆகிய நான்கு துறைகளில் டிப்ளமோ படிப்புகளுக்கு இந்த அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பயில முடியும் என்பது குறிப்பிடதக்கது.
கல்வித் தகுதி:
பத்தாம் வகுப்பு (SSLC/Matriculation) தேர்ச்சி (அல்லது) அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கல்லூரியில் சேர விண்ணப்பிக்கும் முறை:
மாணவ மாணவியர்கள்: https://www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் மாவட்ட சேவை மையங்கள் (TNEA Facilitation Centre) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பதிவு கட்டணம் :
பதிவுக் கட்டணமாக ரூ150/-யை விண்ணப்பதாரர் Debit Card /Credit Card/Net Banking இணையதள வாயிலாக செலுத்தலாம். SC/ST பிரிவினருக்கு பதிவுக் கட்டணம் செலுத்த அவசியமில்லை.
முதலாமாண்டு பட்டயப் படிப்பிற்கான இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள்: 07.05.2025
முதலாமாண்டு பட்டயப் படிப்பிற்கான இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள்: 23.05.2025
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
கிரிக்கெட்
இந்தியா





















