மேலும் அறிய
Advertisement
‛மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 50 மாணவர்கள் சேர்க்கை’ - அமைச்சர் மா.சு., பேட்டி!
மத்திய அரசு குழந்தைகளுக்கான தடுப்பூசி பணிகளை துவக்கினால், முதலில் தொடங்குவது தமிழ்நாடாக தான் இருக்கும்.. மா சுப்பிரமணியன் மதுரை விமான நிலையத்தில் பேட்டி.
மதுரை மாவட்டம் அரசு ராஜாஜி மருத்துவமனை பாலரெங்காபுரம் மண்டல புற்றுநோய் மையத்ததில் மேம்படுத்தப்பட்ட வெளிப்புற கோபால்ட் 60 அதிநவீன புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் ஆகியோர் துவக்கி வைத்தனர். உடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலாளர், இந்திய
ஹோமியோபதித்துறை இயக்குநர்,மாவட் ட ஆட்சியர், மருத்துவம் மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்...,” கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி நிகழ்வு மதுரையில் துவங்குகிறது. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் செயல்பாட்டிற்கு வரும். நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாடு முதல்வர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இது போல் பல்வேறு திட்டங்கள் இன்று துவங்கப்படும்” என்றார். மேலும் செய்தியாளர் கேள்விக்கு பதில் அளிக்கும் போது.
தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்த கேள்விக்கு !
அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சுகாதாரத் துறை செயலாளர் மூலம் கிருமி நாசினி தெளித்து தேவையற்ற இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி துவங்க உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது தமிழகத்தில் ஆரம்பிக்க வாய்ப்புள்ளதா?
மத்திய அரசு குழந்தைகளுக்கான தடுப்பூசி பணிகளை துவங்கினால் முதலில் தொடங்குவது தமிழ்நாடாக தான் இருக்கும். டெங்கு பாதிக்கப்பட்டவர்கள் 600-க்கும் மேற்பட்டோர் நலமாக உள்ளார்கள். அதற்கான விழிப்புணர்வு எல்லா இடங்களையும் நடைபெற்று வருகிறது.
”யூடியூப் பார்த்து பிரசவம் செய்வதால் பல்வேறு உயிர் பலிகள் ஏற்படுகிறது” இது குறித்த கேள்விக்கு !
அது ஒரு தவறான அணுகுமுறை இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்துறையில் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறதே?
இதுகுறித்து புகார்கள் வந்த உடனே காவல் துறை மூலம் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கோயில் திருவிழாக்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை அதற்கான அனுமதி சுகாதாரத்துறை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே ?
தமிழ்நாடு அரசு கொரோனா விதிமுறை தளர்வுகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஒமிகிரான் போன்ற அச்சுறுத்தல்கள் இருந்து கொண்டிருப்பதால் சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.
தொடர்ந்து கிறிஸ்துமஸ் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் நடைபெறுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த கேள்விக்கு !.
கொரோனா விதிமுறைகளை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும் முக கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. வருகிற பண்டிகை நாட்களில் பொதுமக்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டியது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கடமையாக உள்ளது.
பள்ளி கல்லூரிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுமா?
தொடர்ந்து பள்ளி கல்லூரிகளில் கொரோனா விதிமுறைப்படி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் விதிமுறைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல் படுத்தப்பட்டு வருகிறது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி நிலவரம் ?
அதற்கான அதிகாரிகளும் என்னுடன் இன்று மதுரை வந்துள்ளனர். முதல் 50 மாணவர்கள் சேர்க்கைக்கான பணிகள் குறித்து பேசப்பட்டு வருகிறது. எந்தக் கல்லூரியில் சேர்ப்பது என்பது குறித்து விரைந்து முடிவெடுத்து தமிழ்நாடு முதல்வரிடம் ஆலோசனை பெற்று முடிவுகள் எடுக்கப்படும் இவ்வாறு கூறினார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion