மேலும் அறிய

Loksabha Election: பனியாரம், வடை சுட்டு வாக்கு கேட்ட பா.ம.க. வேட்பாளர் - திண்டுக்கல்லில் சுவாரஸ்யம்

முதல் கட்ட பிரச்சாரத்தில் சாலை ஓரங்களில் உள்ள கடைகளில் பணியாரம் மற்றும் வடைகள் சுற்றி நூதன முறையில் வாக்கு சேகரித்து அசத்திய திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா.

நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தபின்பு, அந்தந்த கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின் தங்களது பகுதிகளில் வாக்குகளை சேகரிக்க தீவிர பரப்புரை  மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல் பாராளுமன்றத்திலும் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களும் வாக்கு சேகரிக்க தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

MI vs RR LIVE Score: களமிறங்கும் ஹர்திக் பாண்டியா படை; டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச முடிவு!

Loksabha Election: பனியாரம், வடை சுட்டு வாக்கு கேட்ட பா.ம.க. வேட்பாளர் - திண்டுக்கல்லில் சுவாரஸ்யம்

பனியாரம், வடை சுட்டு பிரச்சாரம்:

தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா இன்று தனது முதல் கட்ட பிரச்சாரத்தை ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் சாமி வழிபாடு நடத்தி பிரச்சாரத்தை தொடங்கினார்.  மேளதாளங்கள் முழங்க சாலைகளில் நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது சாலை ஓரங்களில் உள்ள கடைகளில் வேட்பாளர் திலகபாமா பணியாரம் மற்றும் வடைகள் சுட்டு அசத்தி நூதன முறையில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

KVS Admission 2024: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடக்கம்; விண்ணப்பிப்பது எப்படி?

Loksabha Election: பனியாரம், வடை சுட்டு வாக்கு கேட்ட பா.ம.க. வேட்பாளர் - திண்டுக்கல்லில் சுவாரஸ்யம்

மேலும் அவர் பேசுகையில் இந்த தொகுதியில் உள்ள அமைச்சர்களோ மற்ற கட்சி நிர்வாகிகளோ இந்த பகுதிக்கு கூட வந்திருக்க மாட்டார்கள். அதனால் தான் நான் இந்த பகுதியை தேர்ந்தெடுத்து எனது முதல் கட்ட பிரச்சாரத்தை துவங்குகிறேன். பிரச்சாரத்திற்கு ஐ.பெரியசாமியை அழைத்து வருகிறார்கள். அவர் ஜூலை 31ம் தேதி முதல் சிறை பறவையாகி விடுவார். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற திமுக பாராளுமன்ற உறுப்பினரை கூட அழைத்து வர தைரியமில்லை. இரட்டை இலை, இரட்டை இலை என்று ஒன்று இருந்தது. அது இப்போது துரோகத்தினால் மண் மூடி கிடக்கின்றது.

Udhayanidhi Stalin: இலங்கை தாக்குதலை ஏன் தடுக்கவில்லை? எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கல் எப்போது? பிரதமருக்கு உதயநிதியின் 10 கேள்விகள்

அவர்கள் ஒருத்தரை கூட்டி  வருகிறார்கள். அவர்களுக்கு பிரதமர் யார் என்று தெரியவில்லை.  இவர்கள் ஏன் தேர்தலில் நிற்க வேண்டும். ஒட்டு வாங்க வேண்டும் என்பதற்காக . ஆகையால் மீண்டும் மோடி பிரதமர் ஆக வேண்டும் என்றால் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு அளித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Poondi Dam: சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand | Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Poondi Dam: சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடருமா? அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அப்டேட்!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடருமா? அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அப்டேட்!
Chembarambakkam Lake: 6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
Naan Mudhalvan scheme: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 1 லட்சம் பேருக்குப் பணி: அமைச்சர் கோவி செழியன் பெருமிதம்!
Naan Mudhalvan scheme: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 1 லட்சம் பேருக்குப் பணி: அமைச்சர் கோவி செழியன் பெருமிதம்!
சாய் பல்லவியவே கோபப்பட வச்சீட்டாங்களே...சைவத்திற்கு மாறினாரா சாய் பல்லவி ?
சாய் பல்லவியவே கோபப்பட வச்சீட்டாங்களே...சைவத்திற்கு மாறினாரா சாய் பல்லவி ?
Embed widget