Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Parasakthi : சிவகார்த்திகேயன் நடித்து இண்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள பராசக்தி படத்தின் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன

சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமான பராசக்தி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. டான் பிக்ச்சர்ஸ் தயரித்து சுதா கொங்காரா இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழ்நாட்டில் நடந்த மாணவ போராட்டங்களை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைந்துள்ளது. அதர்வா , ரவி மோகன் , ஶ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
காலை காட்சிகள் ரத்து
பராசக்தி படத்தின் முதல் காட்சிகள் வெளிநாடுகளில் இந்திய நேரப்படி அதிகாலை 6 மணி தொடங்கியுள்ள. இந்தியாவில் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கும் பிற மாநிலங்களில் காலை 7 மற்றும் 8 மணிக்கு சிறப்பு காட்சிகள் தொடங்க இருந்தன. இப்படியான நிலையில் அனைத்து மாநிலங்களிலும் அதிகாலை 7 மற்றும் 8 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்க இருக்கிறது. சிறப்பு காட்சிகளுக்கு டிக்கெட் புக் செய்திருந்த ரசிகர்கள் இதனால் வருத்தமடைந்துள்ளார்கள்.
படத்தை கெடுத்ததா சென்சார் போர்ட்?
பராசக்தி படத்திற்கு தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்தி மொழித் தொடர்பான 25 காட்சிகள் மற்றும் வசனங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் படம் சொல்ல வரும் கருத்து பாதிக்கப்படும் என்றும் படம் பார்க்கும் அனுபவத்தை கேடுக்கும் என்றும் ரசிகர்கள் கருதுகிறார்கள். இந்தியா தவிர்த்து பிற நாடுகள் எந்த வசனமும் காட்சிகள் நீக்கப்படாமல் பராசக்தி படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.
பராசக்தி விமர்சனம்
இன்னொரு பக்கம் பராசக்தி படத்தின் அதிகாலை 6 மணி காட்சிகளுக்கான விமர்சனங்கள் வெளிவரத் தொடஙகியுள்ளன. ஒரு தரப்பு ரசிகர்கள் படத்தை பாரட்டி வரும் நிலையில் மற்றொரு தரப்பினர் படம் சொதப்பல் என்று கூறி வருகிறார்கள். தொய்வான திரைக்கதை, செட் ஆகாத ரொமான்ஸ் காட்சிகள் , வளவளவென்று செல்லும் கதை ஆகியவை படத்தின் குறைபாடுகளாக சொல்லப்படுகின்றன. சிவகார்த்திகேயன் , அதர்வா , ரவி மோகன் ஆகியோரது நடிப்பும் , இந்தி எதிர்ப்பு குறித்தான வசனங்கள் , இடைவேளை காட்சி படத்தின் பாசிட்டிவான அம்சங்களாக அமைந்துள்ளன.





















