இ-பாஸ் சோதனையால் முடங்கிய கொடைக்கானல்... அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
இ-பாஸ் பரிசோதனை தீவிரபடுத்தப்பட்டதன் காரணமாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது .
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இங்கு தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறையில் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருவது வாடிக்கையாக உள்ளது .
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.
இங்கு வரும் பயணிகளுக்கு பெரும் இடையூறாக போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. கொடைக்கானல் வத்தலகுண்டு சாலை முதல் அப்சர்வேட்டரி சாலை, ஏரி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகனங்கள் அணிவகுத்து பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பெரும் இன்னலுக்கு ஆளாக்கப்பட்டு வந்தனர். தொடர்ந்து காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் தற்போது பெரும் இடையூறாகவே இந்த போக்குவரத்து நெரிசல் உள்ளது .
Pakistan: கொடூரம்! 22 பேர் மரணம்! பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதலால் பயங்கரம்
இந்த நிலையில் கடந்த மே மாதம் கொடைக்கானலுக்கு வருகை தரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் இ-பாஸ் பெற்ற பிறகு கொடைக்கானலுக்கு வரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து இ-பாஸ் முறை அமலுக்கு வந்தது. கடந்த மாதங்களில் இ-பாஸ் முறையை சரியாக அமல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து நேற்று சென்னை உயர்நீதிமன்றம் கொடைக்கானல் செல்லும் அனைத்து வாகனங்களும் இ-பாஸ் பெற்ற பிறகு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தது .
ஒரே விமானத்தில் முதல்வர் ஸ்டாலின்- ஆளுநர் ரவி பயணம்... மதுரையில் பாதுகாப்பு தீவிரம்
இதனால் கொடைக்கானல் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடியில் இன்று கொடைக்கானலுக்கு வருகை தரும் அனைத்து வாகனங்களையும் நகராட்சி பணியாளர்கள் சோதனை செய்து வருகின்றனர். இ-பாஸ் பரிசோதனை தீவிர படுத்தப்பட்டதன் காரணமாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது .