மேலும் அறிய

Minister Muthusamy : ”ஈரோடு திமுகவில் உள்ளடி வேலை?” அமைச்சர் முத்துச்சாமிக்கு எதிராக உடன்பிறப்புகள்..!

25 ஆண்டு காலத்திற்கு மேலாக அதிமுகவில் பதவி வகித்து, திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாசலம் பெருந்துறை தொகுதி சீட்டை வாங்கி விடுவாரோ என்ற பயத்தில் முத்துசாமி பேசியதாக கூறப்படுகிறது

பெருந்துறை தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படலாம் என கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பாவதற்கு முன்பே தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசியுள்ளது திமுகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அந்த தொகுதியை திமுகவினருக்கு ஒதுக்க கூடாது என்பதற்காக முத்துசாமியே உள்ளடி வேலைகளை பார்த்து வருவதாக ஈரோடு திமுக வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.
 
தேர்தல் பார்வையாளர் கூட்டத்தில் பேசிய முத்துசாமி
 
2026 தேர்தலுக்கான வேலைகளில் திமுக தற்போதே மும்முரமாக இறங்கியுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதி பார்வையாளராக டாக்டர் மகேந்திரனை அறிமுகப்படுத்திய அமைச்சர் முத்துசாமி, அதற்கு பிறகு பேசிய விஷயங்கள் கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருந்துறை தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறோம், ஆனால் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படலாம். அவ்வாறு ஒதுக்கப்படும் பட்சத்தில் நீங்கள் அனைவரும் வேலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். 
 
பெருந்துறையின் நிலவரம் இதுதான்
 
இந்த முறை எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என காத்திருந்த நிர்வாகிகளுக்கு அவரது பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2016ல் திமுக சார்பில் போட்டியிட்ட கே.பி.சாமி அதிமுக சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலத்திடம் தோல்வியடைந்தார். 2021ல் இந்த தொகுதி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்த கட்சியின் சார்பில் போட்டியிட்ட கே.கே.சி பாலு அதிமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இந்த முறையும் கூட்டணி கட்சிக்கே ஒதுக்கி விடுவார்களோ என திமுகவினர் குழப்பத்தில் இருக்கின்றனர். 
 
ஈரோடு மாவட்டத்தில் தான் மட்டும்தான் என நிறுவ நினைக்கிறாரா முத்துசாமி?
 
ஆனால் பெருந்துறை தொகுதியை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்குவதற்கான வேலையை முத்துசாமி செய்து வருவதாக சொல்கின்றனர். அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த முத்துசாமி, அதன்பிறகு கட்சியின் முக்கிய நபர்களை ஓரங்கட்டியதாக பேச்சு இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் சமயத்திலும் ஈரோடு தொகுதியில் மதிமுகவின் கணேச மூர்த்தியை களமிறக்க பெருமுயற்சி எடுத்தார் முத்துசாமி. ஆனால் திமுக தலைமை அதற்கு மாறாக திமுக சார்பில் பிரகாஷை வேட்பாளராக அறிவித்தது. 
 
தோப்பு வெங்கடாசலத்தை ஓரங்கட்ட முயற்சியா ?
 
தற்போது பெருந்துறை தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என அவர் பேசியதன் பின்னணியில் ஒரு முக்கிய காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. 25 ஆண்டு காலத்திற்கு மேலாக அதிமுகவில் பதவி வகித்து, திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாசலம் பெருந்துறை தொகுதி சீட்டை வாங்கி விடுவாரோ என்ற பயத்தில் தான் ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்து விடலாம் என நினைத்து முத்துசாமி பேசியதாக ஈரோடு திமுகவினர் மத்தியில் பேச்சு இருக்கிறது. 
 
ஈரோடு திமுகவில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தை தீர்க்க திமுக தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேர்தல் வேலைகளை ஆரம்பிக்கும் போதே நமக்கு சீட் இல்லை என சொல்வதால் நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் மெத்தனம் காட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதால், உடனடியாக திமுக தலைமை தலையிட வேண்டும் என ஈரோடு திமுக தரப்பில் இருந்து குரல் எழுந்து வருகிறது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Embed widget