மேலும் அறிய

Pakistan: கொடூரம்! 22 பேர் மரணம்! பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதலால் பயங்கரம்

பாகிஸ்தான் நாட்டில் தற்கொலைப் படை நடத்திய தாக்குதலால் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் அடிக்கடி தீவிரவாத சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனால், அந்த நாட்டு மக்களும், உலக நாடுகளும் கவலை கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், பாகிஸ்தான் நாட்டில் மற்றொரு சோகமான நிகழ்வு அரங்கேறி உள்ளது.

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்:

பாகிஸ்தானில் அமைந்துள்ளது பலூசிஸ்தான். இந்த நகரத்தில் உள்ள கட்டா ரயில்நிலையம். இந்த ரயில் நிலையத்தில் இன்று காலை 9 மணியளவில் திடீரென வெடிகுண்டு வெடித்தது. பயங்கர சத்தத்துடன் வெடித்த இந்த வெடிகுண்டால் அந்த இடத்தில் இருந்த பொதுமக்கள் பலரும் தூக்கி வீசப்பட்டனர்.

22 பேர் மரணம்:

இதில், ரயில்வே நிலையத்தில் இருந்த 22 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் காயம் அடைந்துள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலைப்படை தாக்குதல் என்று தெரியவந்துள்ளது.

வழக்கமாக அந்த நேரத்தில் கட்டா ரயில் நிலையத்தில் இருந்து ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் செல்வது வழக்கம். ஆனால், பெஷாவர் நோக்கிச் செல்லும் அந்த ரயில் இன்று அந்த நேரத்திற்கு வரவில்லை. இந்த வெடிகுண்டு தாக்குதல் ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு அலுவலகத்தில் நடந்தது. அந்த நேரத்தில் ரயில் வந்திருந்தால் உயிரிழப்பு இன்னும் அதிகரித்திருக்கக்கூடும். ரயில் வருவதை கணக்கிட்டே இந்த தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதிகாரிகள் விசாரணை:

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அந்த நாட்டு மீட்பு படையினர் மற்றும் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி அடையாளம் காணும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் நிகழ்ந்தபோது ரயில் நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட மக்கள் இருந்தனர். குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற கட்டா நகரம் பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரம் என்பதால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அதிகளவு காணப்படுவது வழக்கம் ஆகும். மக்கள் ரயில்களுக்காக காத்திருக்கும் இடத்தில் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கும் தருணத்தின்போது தண்டவாளத்திலும் வேறு ரயில்கள் இல்லாததால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கவில்லை.

உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்:

காயமடைந்த பயணிகளில் சிலரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில், வெடிகுண்டு சம்பவம் நடந்த இந்த இடத்தில் மோப்பநாய்களுடன்  வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். ஆதாரங்களின் அடிப்படையில் அந்த நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget