மேலும் அறிய
Advertisement
Katrina kaif: உசிலம்பட்டியில் கத்ரீனா கைஃப் தந்தையின் 3வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மருத்துவ முகாம்
கத்ரீனா கைஃப் -ன் தாய் மேரி தெரசா சுஸான்னா மறைந்த ஜெஸி ஜோசப் டிஞ்சரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் -ன் தந்தை ஜெஸி ஜோசப் டிஞ்சர்ன் 3வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உசிலம்பட்டி அருகே உள்ள அவரது பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஏராளமான ரசிகர்களை கவர்ந்த கத்ரீனா கைஃப்:
கத்ரீனா கைஃப் சினிமாவில் நுழைந்த இந்த 20 வருடங்களில் ஷாருக்கான், அக்ஷய் குமார், அமீர்கான், சல்மான் கான் என அனைத்து முன்னணி பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து ஜோடியாக நடித்து விட்டார். அவரின் திறமையான நடிப்பிற்கு மட்டுமின்றி சிறந்த உடலமைப்பு மற்றும் அவரின் ஆளுமை திறன் இவற்றையும் ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்-ன் தந்தை ஜெஸி ஜோசப் டிஞ்சர்-ன் 3-வது ஆண்டு நினைவு தினம்
பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தந்தை ஜெஸி ஜோசப் டிஞ்சர் -ன் 3வது ஆண்டு நினைவு தினம் நேற்று 24 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது., அவரது 3வது ஆண்டு தினத்தை முன்னிட்டு இன்று, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இ.புதுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள நடிகை கத்ரீனா கைஃப் பள்ளி வளாகத்தில் பள்ளி நிர்வாகமும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையும் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தினர். உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன், கத்ரீனா கைஃப் -ன் தாய் மேரி தெரசா சுஸான்னா இணைந்து மறைந்த ஜெஸி ஜோசப் டிஞ்சரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து உசிலம்பட்டி எம்.எல்.ஏ., தனக்கு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு இந்த மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்.
பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டனர்.
இந்த முகாமில் அருகில் உள்ள தொட்டப்பநாயக்கணூர், இடையபட்டி, புதுப்பட்டி, கிருஷ்ணாபுரம், அம்பாசமுத்திரம் புதூர், சடையாண்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்த அழுத்தம், சக்கரை, கண் விழி பரிசோதனை உள்ளிட்ட பல்வறு மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Quarterly Exam Holidays: வெளியான அறிவிப்பு; காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிகள் திறப்பு எப்போது?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - லிப்ஸ்டிக் போட்டது ஒரு குத்தமா? மேயர் பிரியாவின் தபேதார் மாதவி அதிரடி இடமாற்றம்- பின்னணி என்ன?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion